Wednesday, July 11, 2007

அப்ப இவங்களுக்கு என்ன பேர்????

நேற்று ஒரு தலைவர் சொல்லி இருக்கிறார் நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று, கொஞ்ச நாட்களுக்கு முன்பு சொல்லி இருந்தார் கிரிக்கெட்டால் இளைய சமுதாயம் கெடுகிறது அதை ஒரு 5 வருடங்களுக்கு தடை செய்யவேண்டும் என்று.

ஐயா சினிமா ரசிகர்கள் எல்லா நாட்களும் நடிகர் பின் அலைவது இல்லை, வருடத்துக்கு ஒரு முறையோ இரண்டு வருடத்துக்கு ஒரு முறையோ சினிமா தியேட்டர் முன் ஆட்டம் போட்டு படம் பார்த்து முடிந்த உடன் தன் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.

கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீட்டுக்கு வரும் கேபிள் கனெக்சனில் ஆட்டத்தை பார்த்துவிட்டு படுத்து விடுகிறார்கள், ஆனால் கட்சியில் உருப்பினராக இருக்கும் தொண்டர்கள் நீங்க நினைச்சா ஒரு திட்டத்தை ஆதரிச்சு பொது கூட்டம் போட சொல்வீங்க, இல்லேன்னா அடுத்த நாளே வேற ஒரு திட்டத்த எதிர்த்து தெரு முனை பிரச்சாரம் என்று எல்லாரையும் தெருவுக்கு வரசொல்வீங்க.

கொஞ்ச நாள் கழித்து சூறாவளி சுற்று பயணம் போவீங்க, சில பேர் நடை பயணம் போறேன் என்று தனியாக போகாம அடுத்த வேலைக்கு வேலை செஞ்சாதான் சாப்பாடு என்று இருக்கும் தின கூலி குப்பனையும் சுப்பனையும் அழைச்சுக்கிட்டு போவீங்க.

நாகபட்டிணத்தில் இருக்கும் தொண்டனை தளபதி மதுரைக்கு அழைக்கிறார் அலைகடலென திரண்டு வாங்க, சுனாமி போல எழுந்து வாங்க என்று அவனை ஒரு மூன்று நாள் அழைச்சுக்கிட்டு போய் பாரீர் தலைவரின் உரைய கேட்க திரண்ட கூட்டத்தை என்று பேப்பரில் போட்டோ போடுவீங்க.

வருசத்துக்கு ஒரு முறையோ இல்லை இல்ல ஆறு மாசத்துக்கு ஒரு முறையோ மாநாடு என்று கூப்பிடுவீங்க. இப்படி நீங்க கூப்பிட்ட குரலுக்கு எல்லாம் ஓடி வரனும் நீங்க மாநாட்டுக்கு முன்னாடி ஆளும் கட்சியா இருந்தா ஹெலிகாப்டரில் சும்மா cool ஆக வந்து மாநாட்டுல 10 நிமிசம்பேசிட்டு டாட்டா காட்டிட்டு போய்விடுவீங்க. இல்ல எதிர் கட்சியாக இருந்தால் A/C கார்ல படை சூழ பவனி வந்து போஸ் கொடுப்பீங்க.

இங்கேந்து அங்க வர என்ன எல்லாருக்கு டிராவல் அலோன்ஸ் கொடுக்குறீங்களா? இல்ல சாப்பாட்டுக்கு பணம் கொடுக்குறீங்களா, மூனு நாள் மாநாடு என்றால் சாயந்திரம் மாநாடு முடிஞ்சதும் அங்கு இருக்கும் TBயில் போய் நல்லா ஓய்வு எடுத்துப்பீங்க, உங்களுக்காக வந்த தொண்டன மாநாட்டு பந்தலில் கூட படுக்கவிட மாட்டீங்க அங்க அங்க தரையில் துண்ட விரிச்சு படுத்து கிடப்பான். மறு நாள் நீங்க எதிர் வெய்யிலா இருக்கு சைடு வெய்யிலா இருக்குன்னு சூடு தனிஞ்ச பிறகு வருவீங்க ஆனா இவன் மட்டும் காலையில் இருந்து மண்டைய பிளக்கும் வெய்யிலில் உங்க கட்சி கொடிய ஏந்தி அல்லகையா நிக்கனும்.

புடிச்சா கூட்டணி வச்சுப்பீங்க இல்ல அறுத்துவிட்டு அடுத்த கட்சிய பார்க போய்விடுவீங்க, இங்க உங்களுக்காக பழைய எதிர் கட்சி கவுண்சிலரையும் லோக்கல் ஆட்களையும் முறைச்சுகிட்ட மாரியப்பன் என்ன செய்வான்? நாளு நாட்கள் வீட்ட விட்டு வெளியவர மாட்டான் எவ்வளோ கேலி பேச்சுக்கும் கிண்டலுக்கும் அவன் ஆளாவான்னு என்னைக்காவது நினைச்சு பார்த்து இருக்கிங்களா?

வீட்டுல ஒரு பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னா கூட சாப்பிட்ட தட்ட கழுவ மாட்டான் வீட்ட கூட்ட மாட்டான்ஆனா நீங்க அவன் ஊர் பக்கமா போறதா இருந்தா தட்டி கட்டி ரோட்ட கூட்டிக்கிட்டு நிற்ப்பான், ஒரு கூடையில் குளோரின் பவுடரை போட்டு அழகா இடைவெளி விட்டு விட்டு தரைக்கு பவுடர் போடுவான்...

நாலு மாசத்துக்கு முன்னாடியே நீங்க தேர்தல் தேதிய அறிவிச்சு விடுவீங்க என்னமோ நாடு பிடிக்க போகும் படை வீரன் மாதிரி ஒவ்வொருத்தனும் கையில் பெயிண்ட் டப்பாவுடன் கு.மு.கு.க full சோ.மு.சோ.க full ன்னு ஒவ்வொரு சுவரா எழுதி ரிசர்வ் செஞ்சுகிட்டு வருவான். அந்த ஊர் முழுவதும் எதிர் கட்சி ஆட்கள எதிர்த்து எழுதிவிட்டு வெற்றி களிப்புடன் இருப்பான், நீங்க கடைசி ஒரு பத்து நாட்களுக்கு முன்கூட்டணி மாறி விட்டு என் சகோதரி அழைக்கிறார், சித்தப்பா அழைக்கிறார் என்று போய் ஒரு துண்ட போட்டு சமாதானம் ஆயிடுவீங்க...நாடு புடிச்சு வச்ச ராசா என்ன செய்வான்?????

இப்படி எல்லாம் இருக்கும் தொண்டனுக்கு முதல்ல ஒரு பேர் வையுங்க ...தொண்டன் தொண்டன் என்று சொல்லி சொல்லி அலுத்து போச்சு.

39 comments:

Anonymous said...

Sariyaana seruppadi...

said...

//ஹெலிகாப்டரில் சும்மா cool ஆக வந்து மாநாட்டுல 10 நிமிசம்பேசிட்டு டாட்டா காட்டிட்டு போய்விடுவீங்க//
சம்மந்தமே இல்லாமல் ரஜினியை இந்த விஷயத்தில் இழுத்திருப்பதை நான் உண்மையாக கண்ணடிக்கிறேன்

said...

நாந்தான் பஸ்டு

எப்படியோ பத்த வச்சா சரிதான்

said...

குசும்பனும் அரசியல் பதிவுக்கு வந்தாச்சி

என் இனமடா நீ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

என்னத சொல்ல?
தொண்டன் தொண்டன்னு சொல்லித்தான தலைவர்கள் உறுவாகுறாங்க

said...

இன்னுமா பப்ளிஷ் பன்னல

said...

உன் கண்ணு முன்னடியே தமிழ்மண முகப்பில இருந்து இந்த பதிவெ தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
வ்
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
வ்
தூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா
வ்
தூக்குறன்ய்யா
வ்
தூக்குறன்ய்யாதூக்குறன்ய்யாதூக்குறன்ய்யா
தூக்குறன்ய்யா

Anonymous said...

குசும்பா,

உன்னையே கோபப்பட வெச்சுட்டாங்களே. முதல்வன்ல அர்ஜூன் கடைசியா கேப்பாரே, கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே சார்னு அந்த மாதிரி.

இதுக்குப் பதில செருப்புல அடிச்சிருக்கலாம். செமை சூடு.

said...

குசும்பனும் அரசியல் பதிவுக்கு வந்தாச்சி

என் இனமடா நீ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

இன்னுமா வெளிய விடுங்க

said...

நண்பர்களே சும்மா என் மணசுல, எங்க ஊர்ல எலெக்ஸன் டைம்ல நடந்த வச்சு எழுதி இருக்கிறேன். நான் இதை எழுதியது நேற்று சொன்ன தலைவருக்காக மட்டும் அல்ல இங்கு நான் எங்குமே எந்த கட்சியையும் குறிப்பிட்டு எழுதவில்லை, ஆரோக்கியமான விவாதத்திற்கு தயார்.

said...

என்ன குசும்பு இப்படி பண்ணிட்டே! அவசரபட்டு இப்படி ஒரு இடுகைய(உண்மைய) போட்டுட்டயே! அவ்வளவு தான் இனிமேல ஆண்டவனாலயும் உன்னை காப்பாத்த முடியாது!! :)))

said...

you too Kusumbs!!

said...

//ஆரோக்கியமான விவாதத்திற்கு தயார்.//
இந்த வீரவசனத்து ஒன்னும் குறைச்சலில்லை.

வீரம் என்றால் என்ன தெரியுமா? பயப்படதா மாதிரி நடிக்கிறது - கமலஹாசன்

said...

கூழு காய்ச்சரது! போஸ்டர் ஒட்டுற சமாச்சாரமெல்லாம் விட்டுடீங்களே!!

said...

சூப்பர்!

said...

மகி,வெங்கட் ராமன், நந்தா,குட்டி பிசாசு, தம்பி எல்லாருக்கும் நன்றி.

வீரம் என்றால் என்ன தெரியுமா? பயப்படதா மாதிரி நடிக்கிறது -

இருந்துட்டு போகட்டும்.

said...

துளசி கோபால் said...
you too Kusumbs!!

தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

என்ன செய்ய.:(((

said...

// துளசி கோபால் said...

you too Kusumbs!! //

என்ன நெனச்சிங்க எங்க குசும்பர பத்தி,

புரட்சி பீரங்கி!
கொள்கைப் புயல்!
விமர்சன வித்தகர்!
எதிர்வினை எரிமலை!!

said...

ஆனாலும் 1001 தான் இருந்தாலும் குசும்பர் மாலடிமைய இப்படி எல்லாம் திட்டி இருக்க கூடாது!!
(நாராயண! நாராயண!)

said...

குசும்பு வசமா மாட்டிகிட்டதால, எங்க காட்டுல மழை தான்! (பேரு கொஞ்சம் சூடா வச்சி இருக்கலாம்! கும்மி 50 தாண்டி போயிருக்கும்!)

said...

ஏமாளிங்க.....!!!!

said...

குட்டி பிசாசு எத்தன நாள் கோபம்ய்யா என்மேல,,, நாம எல்லாம் ஒரு குடும்பம் இல்லை? என் ராசா ஏன் இப்படி ஒரு கொலை வெறி,
பின்னூட்டம் 38 வர வரைக்கும் பப்ளிஸ் செய்வேன் அதன் பிறகு செய்ய மாட்டேனே!!! இப்ப என்னா செய்யுவ இப்ப என்னா செய்யுவ இப்ப என்னா செய்யுவ

said...

சரி!! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! வாழ்க வளமுடன்!

said...

///// ஆரோக்கியமான விவாதத்திற்கு தயார்.

ஆரோக்கியமான விவாதமா . . . .?
அதுவும் அரசியல்லையா. . . . . ?

இந்த குசும்பு தானே வேணாங்கிறது. . . . . . . !!!!!!

said...

\\குசும்பன் said...
குட்டி பிசாசு எத்தன நாள் கோபம்ய்யா என்மேல,,, நாம எல்லாம் ஒரு குடும்பம் இல்லை? என் ராசா ஏன் இப்படி ஒரு கொலை வெறி,
பின்னூட்டம் 38 வர வரைக்கும் பப்ளிஸ் செய்வேன் அதன் பிறகு செய்ய மாட்டேனே!!! இப்ப என்னா செய்யுவ இப்ப என்னா செய்யுவ இப்ப என்னா செய்யுவ\\

அது

Anonymous said...

கோபம் நியாயமானதுதான். 100%.
I agree

1. ஆனா இதுக்கு யார் ரியாக்ஷன் பண்ணனுமோ அவங்க பண்ணப்போறது இல்ல.

2. எல்லாவற்றுக்குமே ஒரு விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மாற்றும் இல்லை.
(புதுசா வந்திருக்கும் விஜயகாந்த் கூட பிரியாணி போட்டுதான் கூட்டத்தை கூட்டறதா கேள்வி!)

3. வெகு சமீபத்தில இதுக்கு முடிவு கிடைக்கிறமாதிரியும் இல்லை.

ஆகவே

உங்க favourite குசும்பு பதிவை படிக்க வரும் ரசிகர்களை சூடான பதிவுகள் மூலம் ஏமாற்றவேண்டாம் என்று தங்களின் "ரசிகர் மன்றம்" சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

& Well said. Hats off too :)

சிவா
sivaramang.wordpress.com

said...

சரி குசும்பன் நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கலாம் ஒரு நடிகனுக்கு கூஜா தூக்குறதால நாட்டுக்கு என்ன கிட்டுதுன்னும் ஒரு அரசியல் வாதிக்கு கூஜா துக்குறதால நாட்டுக்கு என்னகிட்டும்னும் பேசுவோமா?

said...

நல்ல தலைவர்கள் பின்னால் சுற்றினால் எந்த சமுதாயமும் கெட்டுப்போகாது

said...

அதே நடிகர்கள் பின்னால் சுத்தினால் என்ன ஆகும் என்பது உங்களுக்கும் தெரியும்

said...

நல்லா இருக்கு! ஆமா என்ன சொல்லிருக்கீங்க இதுல?

said...

super

said...

//சரி குசும்பன் நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கலாம் ஒரு நடிகனுக்கு கூஜா தூக்குறதால நாட்டுக்கு என்ன கிட்டுதுன்னும் ஒரு அரசியல் வாதிக்கு கூஜா துக்குறதால நாட்டுக்கு என்னகிட்டும்னும் பேசுவோமா?//

மகி,

நடிகனுக்கு கூஜா தூக்குறதும் வேஸ்ட், அரசியல்வாதிக்கு கூஜா தூக்குறதும் வேஸ்ட். எதுவுமே செய்ய லாயக்கில்லாதவந்தான் ரெண்டையும் செய்வான்.

ரஜினிக்கு பாலாபிஷேகம் பண்ணனுமா
சென்னைக்கோ, கர்நாடகத்துக்கோ போ அஞ்சு பத்து லிட்டர் பால் வாங்கு. ரஜினி ஓ.கே சொன்னார்னா மேல ஊத்தி உழுந்து கும்பிட்டுட்டு வா. அது என்ன போடோவுக்கு பால் ஊத்தறது. போஸ்டருக்கு பால் ஊத்தினா படம் ஓடிடுமா? இந்த மாதிரி சுயபுத்தி இல்லாதவனுங்களும் தப்புதான்.

அரசியல் வாதிக்கு கூஜா தூக்கணுமா?
இத செய்றதுக்கு கிரிமினல் மைண்டு வேணும். அடுத்தவன போட்டு தள்றது. மரம் விட்டு மரம் தாவுற கொரங்கு புத்தி, முக்கியமா எந்த தொண்டனா இருந்தாலும் அனைத்து கட்சி கரைவேட்டிகளும் அயர்ன் பண்ணி பீரோவுல ரெடியா வச்சிருக்கணும் எப்பவேணா தலைவன் மாருவான் அதுக்கேத்த மாதிரி தொண்டனும் மாறிக்கலாம்.

இந்த மாதிரி அடிப்படை தகுதியே இல்லன்னாலும் ஒரு இருவது வருசம் எவனாவது ஒரு அல்லக்கை அரசியல்வாதிக்கு உதவி அல்லக்கையா இருந்த அனுபவமாச்சும் வேணும்.

அதீத வெறி ரசிகனும், அப்பாவி தொண்டனும் இருக்கற வரைக்கும் நல்லா பொழுது போகும்யா! :)

said...

அய்யோ குசும்பா என்ன ஆச்சி உனக்கு, பச்ச புள்ள நீ உன்னையே கொதிக்க வெச்சிடானுங்களே. இதுக்கு தான் மகி கூட சேர வேணாமுன்னு சொன்னேன் கேட்டியா? அவரை மாதிரியே அரசியல் பதிவுகளை போட்டு தாக்குற நீயி..

எல்லாம் சரியா தான் கேட்டு இருக்கே நீயி.. தம்பி பாரு சும்மா கும்முன்னு பதிலை போட்டு இருக்காரு.

Anonymous said...

நன்னா சொன்னேள் போங்கோ
என் ஆத்துகாரரிடம் இந்த பதிவை பற்றி சொல்கிறேன்

said...

எல்லம் சரிதான், அனா என் சாதிகாரன் அப்படின்னுட்டு முதல்லபோய் ஒட்டு போட வேண்டியது..

said...

நல்ல கண்ணோட்டம். நல்ல கேள்வி..

நல்ல அரசியல்வாதிக்கு கூஜா தூக்கலாம்தான். ஆனால் "நல்ல" அரசியல்வாதி????!!!!!! யாரப்பா அது?

Anonymous said...

kusumba! sariyagathan sonneer. aanal paadai madayarkal katchi thalaivarai intha vishayathil innum sariyaaga kizhithirukka vendum.

Anonymous said...

Kusumbha! antha thalaivari patri nirray sollalam! Aanal ippodhu avar konjam maari varukirar. aanal Vaarthai jaalam mattumthan avaridam ullathu. Seyal illai.

Munthaya arasu irnthapodhu TASMAC wine shoppukalai poottu podum porattam nadathuven entrar. Ippozhuthu athai yean theeviramaga seyya mudiyamal irukkirar.

Ivar porattam oosippogirathu? Kaaranam. Thodarnthu poraduvathillai? Unmayana ilakku intri oru oolai porattam thevaya? Unmai enn enil, Vijay mallaya pontra pana mudhalaikalidam panathat vaankikindu oppukku poraduvathaga nadikkiraarkal.

Niraya ini valam varuven.

Nisumban...