Tuesday, July 10, 2007

மாட்டு வண்டி பயணம்

எங்க வீட்டுல ஒரு கூண்டு வண்டி இருந்தது, அப்ப சினிமா, ஆஸ்பிட்டல் என்று அருகில் இருக்கும் டவுனுக்கு போகனும் என்றால் மாட்டு வண்டிதான் ஒரே வழி. மாட்டு வண்டியில போறது என்றாலே ஒரு தனி குஷி வந்துடும். அதிலும் முன்னாடி வண்டி ஓட்டுபவர் சீட்டுக்கு பக்கத்திலும், பின்னாடி கடைசி சீட்டிலும் இடம் பிடிக்க ஒரு போட்டி இருக்கும், அப்படி என்ன முன் சீட்டுல விசேசம் என்றால் அவரு பக்கத்துல உட்காந்துக்கிட்டு அப்ப அப்ப தார் குச்சி வாங்கி மாட்டை லேசா ஒரு அடி அடித்து விட்டு ஹேய் ஹேய் என்று சத்தம் கொடுத்து கிட்டு உட்கார்ந்தா, நாம என்னமோ ஏரோ பிளேன் ஓட்டுர ஒரு சந்தோசம் வரும்,பின் சீட்டுல என்றால் கீழே விழாம இருக்க ஒரு கம்பி லாக் இருக்கும் அதை பிடித்து கொண்டு உட்காந்து நாம முன்னாடி போக பின்னாடி போகும் மரம் எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கலாம். பருவ பெண்கள் யாரும் வண்டிகுள் இருந்தால் முன்னும் பின்னும் திரை போட படும்.
இப்ப பைக்க ஸ்டார்ட் செய்யிறப்ப பெட்ரோல் இருக்கான்னு பார்கிற மாதிரி வண்டி சக்கர லாக் அச்சாணி இருக்கிறதா என்று சரி பார்பார்கள்.



மாட்டு வண்டியில் இரண்டு உண்டு ஒன்று கூண்டு வண்டி, மற்றொன்று கட்ட வண்டி கூண்டு வண்டிதான் வெளியே போய் வர பயன் படும் கார்,இதன் சக்கரத்தில் ரப்பர வளையம் பொருத்த பட்டு இருக்கும் அதனால் குலுங்கள் கொஞ்சம் குறையும்,கட்ட வண்டி விவசாயத்துக்கு பயண் படும் வண்டி உர மூட்டை, நெல் மூட்டை எல்லாம் அடுக்கி எடுத்து போகும் எங்கள் லாரி.

கூண்டு வண்டி
பயணம் மிகவும் இனிமையாக இருக்கும் மாலை படத்துக்கு போக வேண்டும் என்றால் மதியம் முதல் மாட்டுக்கு தண்ணி காட்டுறது, குளிப்பாட்டுறது என்று ஆரம்பித்து விடும். வண்டியில் உட்காரும் இடத்தில் வைக்கோலை மெத்தை மாதிரி அழகாக நிரவி அதன் மேல் ஒரு ஜமுக்காலம் (போர்வை) ஒன்றை விரித்து வைத்துவிடுவார். வைகோலை அப்படி போடுவதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று உட்காரும் பொழுது மெத்தை மேல் உட்காருவது போல் இருக்கும்,மற்றொன்று நாம் படம் பார்த்துவிட்டு வரும் வரை மாட்டுக்கு சாப்பிட உணவு.

சினிமா தியேட்டரில்(??) இப்பொழுது கார்,பைக் நிறுத்துவது போல் அப்ப மாட்டு வண்டி நிறுத்து என்று பெரிய இடம் இருக்கும். அங்க போய் மாட்டு வண்டியை நிறுத்தலாம், பின் இரவு படம் முடிந்த பிறகு இருட்டில் வண்டி வருகிறது என்று எதிரில் வருபவற்களுக்கு தெரிய ஒரு அரிக்கேன் விளக்கு ஏற்றி கட்டி தொங்க விட்டு பின் பயணம் தொடரும், மாட்டு காலில் கட்டி இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்ற சத்தம் , கரு வேல மரத்தில் இருந்து கத்தும் குறட்டை பூச்சி என்று இரவு பயணம் அருமையாக இருக்கும். மாட்டின் காலில்,கழுத்தில் கட்டும் சலங்கை வெறும் அழகுக்காக மட்டும் கட்டுவது இல்லை இரவு பயணத்தின் போது அது கொடுக்கும் ஜல் ஜல் சத்தம் வண்டி ஹாரனாகவும் உபயோக படும். தியேட்டரில் வாங்கி வைத்த முறுக்கை அப்படியே கொறித்துக் கொண்டு சிலு சிலு என்று குளிர் காற்றில் போனது எல்லாம் மிகவும் சுகமான அனுபவம்.

கட்டை வண்டி
பயணம் கரடு முரடாக இருக்கும், வீட்டில் அறுவடையின் பொழுது நெல் மூட்டைகளை வண்டியில் அடுக்கி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு வந்தது, பள்ளி கூடம் போய்விட்டு வரும் பொழுதுரோட்டில் போகும் யார் வீட்டு கட்டை வண்டியிலாவது தலையில் மாட்டி வரும் ஜோல்னா பை புத்தக மூட்டையைவண்டியில் போட்டு விட்டு வண்டி பின்னாடி கொஞ்ச தூரம் தொங்கி கொண்டு சென்றது,பொங்கல் சமயத்தில் கட்டை வண்டி கட்டிக்கிட்டு போய் தாத்தா வீட்டுக்கு மாமா வீட்டுக்கு சித்தப்பா வீட்டுக்கு என்று எல்லாருக்கும் கரும்பு வாழைதார் என்று எல்லாம் வாங்கி கொண்டு வந்தது என்று நிறைய மாட்டு வண்டி பயனங்கள் சுகமான அனுபவங்கள்,இப்பொழு ஊரில் எல்லாத்துக்கும் டிராக்டர், மினி லோடு வண்டி என்று மாட்டு வண்டியின் தேவையை குறைத்து விட்டது.

வண்டி ஓட்டுபவர் குரலுக்கு மாடு அப்படியே கட்டுபடும் அதட்டி ஹய் ஹய் என்றால் ஓட்டம் பிடிக்கும், மூக்கனாங் கயிறை லேசாகஇழுத்து ஹோ ஹோ ஹோ என்றால் அப்படியே நிற்க்கும் பிரேக் பெயிலியர் எல்லாம் கிடையாது.

மாட்டு வண்டியின் பாகங்கள்:

அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

தார் குச்சு: மெலிய மூங்கில் கம்பில் ஊசி ஆனி அடித்து வைத்து இருப்பார்கள் மாடு மெதுவாக போகு பொழுது லேசாக ஒரு குத்து குத்துவார்கள்.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.

16 comments:

  1. me the firstuu!!!

    Regards,
    Abi appa

    ReplyDelete
  2. Very good post:-) The post reminds me my younger days..

    ReplyDelete
  3. எங்க ஊரில் அந்த முன்னிருக்கையை கோஸ் பெட்டி என்பார்கள். ஏன் என்று தெரியாது. ஆனா அதுக்கு அடிதடியே நடக்கும்.

    அப்புறம் அந்த ட்ரைவர் தூங்கிடுவாரு. ஆனா அந்த மாட்டு வழி தெரியும் அதனால அது அப்படியே ஆட்டோ பைலட் சிஸ்டம் மாதிரி வீட்டுக்குக் கொண்டு போய் விடும்.

    நல்லாத்தேன் கொசுவர்த்தி சுத்தி நம்மளையும் சுத்த வைக்கறீங்கடே.

    ReplyDelete
  4. ஹை! மீ த ஃபர்ஸ்ட்

    அய்யோ இந்த ஃபர்ஸ்ட்டோமேனியா எனக்கும் ஒட்டிகிச்சு.. :(

    ReplyDelete
  5. ஏப்பா குசும்பா! இந்த டயர் வண்டி, நுங்கு வண்டி இதோட டெக்னாலஜி, ட்ராவலிங் எக்ஸ்பீரியன்ஸ் பத்தியெல்லாம் சொல்லலயே?

    :))

    ReplyDelete
  6. சூப்பர் பதிவு குசும்பரே.. முன்னாடி எல்லாம் பாட்டி வீட்டுக்கு போனா பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு போக குதிரை வண்டி தான் நான் முன்னாடி ஓடி போயி உக்காந்துகுவேன்... அதே மாதிரி ஆயுத பூஜை முடிஞ்ச உடனே வண்டியில் முதலில் குழந்தைகளை தான் ஏத்திகிட்டு போவாங்க. ஒரு ரூபாயோ இல்ல 2 ரூபாயோ குடுத்தால் போதும் ஊரை ஒரு சுத்து சுத்திட்டு வருவாங்க. அதே மாதிரி தோப்புக்கு போயிட்டு வரும் பொழுதும் மாட்டுவண்டி தான். சுகமா இருக்கும் அதுல போவது..

    ReplyDelete
  7. நன்றி மை ஃபிரண்ட்,

    நன்றி silsil

    ReplyDelete
  8. இலவசக்கொத்தனார் said...
    "எங்க ஊரில் அந்த முன்னிருக்கையை கோஸ் பெட்டி என்பார்கள். ஏன் என்று தெரியாது. ஆனா அதுக்கு அடிதடியே நடக்கும்.

    அப்புறம் அந்த ட்ரைவர் தூங்கிடுவாரு. ஆனா அந்த மாட்டு வழி தெரியும் அதனால அது அப்படியே ஆட்டோ பைலட் சிஸ்டம் மாதிரி வீட்டுக்குக் கொண்டு போய் விடும்."

    வாங்க கொத்தனார் நன்றி,
    ஆம் நீங்க சொல்வது போல் அவர் தூங்கினாலும் கரெக்டாக வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடும்.

    ReplyDelete
  9. காயத்ரி said...
    ஏப்பா குசும்பா! இந்த டயர் வண்டி, நுங்கு வண்டி இதோட டெக்னாலஜி, ட்ராவலிங் எக்ஸ்பீரியன்ஸ் பத்தியெல்லாம் சொல்லலயே?

    :))

    எல்லா வண்டியும் வரும்...

    ReplyDelete
  10. சந்தோஷ் said...
    "சூப்பர் பதிவு குசும்பரே.. முன்னாடி எல்லாம் பாட்டி வீட்டுக்கு போனா பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு போக குதிரை வண்டி தான்"

    குதிரை வண்டியா அப்ப மைனரு...அப்படிதான் எங்க ஊர்ல சொல்லுவாங்க..

    ReplyDelete
  11. நானும் கட்ட மாட்டு வண்டியில நிறைய தடவ போயிருக்கேன்.
    பதிவைப் படிக்கும் போது அந்த நினைப்பு தான் வந்துச்சு.

    ReplyDelete
  12. ஐயா...இந்த பதில் பின்னூட்டம் போடலாமா?

    ReplyDelete
  13. வாங்க வெங்கட், கோபி
    நன்றி

    ReplyDelete
  14. குசும்பன்,
    "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"

    ஐயோ, நான் ஈழத்தில் ஊரில் வாழ்ந்த காலங்களை இரை மீட்கச் செய்தது உங்களின் பதிவு.

    அதுவும் கெஞ்சிக் கூத்தாடி மாட்டுவண்டியை ஓட்டுறதுக்கு பட்டபாடு...

    ReplyDelete
  15. வெற்றி said...
    குசும்பன்,
    "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"

    வாங்க வெற்றி தங்கள் வருகைக்கும் ,தங்கள் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. Nalla vootrinkala! naan vandiyathan sonnen. Ontru uruthi. kusumban pallikku poyi padikkama enna seithuttu irunthar entru ippa therinchu pochu. hi.. hi.. hi...

    NISUMBAN

    ReplyDelete