Thursday, June 21, 2007

எட்டு விளையாட்டு

என்னை அழைத்த சிவா அவர்களுக்கு ஒரு வார்தையில் நன்றி எல்லாம் சரி வராது தனியா கவனிச்சிக்கிறேன் என்னை பற்றிய எட்டு...

1) 12 படிக்கும் பொழுது ஆசிரியர்கள் என்னவாக போகிறீர்கள் என்று எல்லாரிடமும் கேட்டு என் முறை வந்த பொழுது மல்டிமீடியா டிசைனர் ஆக வேண்டும் என்று சொன்னது சொன்னது போலவே அதை செய்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கிராமம், முழுசா நாலு வார்தை இங்கிலீஸில் எழுதவோ படிக்கவோ வராத நான் இன்று வெளி நாட்டில் வெளிநாட்டவருடன் தட்டு தடுமாறி பேசிகிறேன் அதுவே பெரிய சாதனை. (ராசையா படத்தில் வடிவேல் பிரபுதேவா பேசும் இங்கீலிசையை பார்த்து அழுவது போல் உள்ளே இருக்கும் குசும்பன் அடிக்கடி அழுவான்)

2) யாருக்காகவும் எதற்காகவும் என்னை, என் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாத பிடிவாதம், நீ நீயாக இரு நான் நானக இருக்கிறேன் எனது கொள்கை. (காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )

3) காலேஜ் படிக்கும் பொழுது B.Sc மூன்று வருடம் M.Sc இரண்டு வருடம் ஆக மொத்தம் ஐந்து வருடம் நான் வைத்து தலையில் வெட்டாமல் வைத்து இருந்த ஒன்றரை அடி நீள தலை முடி முன் பக்கம் வைத்து இருந்தது, ஹிட்லர் மீசை இப்படி பல கெட்டப் பல எதிர்புகளையும் மீறி வைத்து இருந்தது.

4) மற்றவர்களோடு என்றும் பொருத்தி பார்த்து கொள்ளாத குணம்.

5) தெரியாததை தெரியாது என்று சொல்வதற்க்கு, அதை கேட்டு தெரிந்து கொள்ள தயங்காத குணம். இதனால் பல பேர் கிண்டல் கேலிக்கு ஆளாக நேரிட்டாலும் அந்த குணம் மட்டும் மாறவில்லை.

6) இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)

7) மணதறிந்து இதுவரை யாருக்கும் தீங்கு நினைக்காதது, யாருக்கும் துரோகம் செய்யாதது.

8) நான் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு திறமையாக நினைப்பது உள்ளுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் "கிரியேட்டர்" அவன் ஒரு விளம்பர பிரியன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க அவன் டீவி யில் வருமே அந்த விளம்பர பிரியன் பல பொருட்களுக்கு பல மாதிரியாக விளம்பரம் எப்படி எடுக்கலாம் என்று யோசித்து எழுதி வைத்து இருப்பவன். என்றாவது ஒரு நாள் Ad film making ல சாதிக்கனும் என்று வெறியோடு (மற்றவர் தேவைக்காக) இப்பொழுது உறங்கி கொண்டு இருப்பவன்.

குறிப்பு: exam கூட இத்தனை நேரம் எழுதியது இல்லைங்க.

நான் அழைக்கும் எட்டு பேர்

1) வெங்கட்ராமன்

2) நாமக்கல் சிபி

3) காயத்ரி

4) அய்யனார்

5) துர்கா

6) மின்னுது மின்னல்

7) சந்தோஷ்

8) அபி அப்பா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

21 comments:

  1. நினைச்சேன்!

    அதே மாதிரி இழுத்து விட்டிருக்கீங்க!

    சரி சரி! நானும் எழுதறேன்!

    ReplyDelete
  2. நாமக்கல் சிபி said...
    "நினைச்சேன்!
    அதே மாதிரி இழுத்து விட்டிருக்கீங்க!"

    சிபி நினைக்கிறார்...
    குசும்பன் முடிக்கிறான்....

    ReplyDelete
  3. //சிபி நினைக்கிறார்...
    குசும்பன் முடிக்கிறான்....//

    சந்தோஷம்! இன்னும் இராமுக்கு சந்தேகம் தீறவேயில்லை! இதுல இது வேற!

    ReplyDelete
  4. அது எப்படி அந்னியன் ஸ்டைல்ல பல வேலைகள
    பார்குறீங்க...கவிதை எழுத ஒரு முகம், கலாய்க்க
    ஒரு முகம்..எப்படி இப்படி..

    இப்ப ராம் சந்தேகம் தீர்ந்து இருக்கும்..கவலை படாதீங்க

    ReplyDelete
  5. //நாமக்கல் சிபி said...

    //சிபி நினைக்கிறார்...
    குசும்பன் முடிக்கிறான்....//

    சந்தோஷம்! இன்னும் இராமுக்கு சந்தேகம் தீறவேயில்லை! இதுல இது வேற! //
    இன்னுமா சந்தேகம், அவரு தான்யா இவரு. கவிதை எழுதிகிட்டு கலாய்ச்சா நல்லா இருக்காதுன்னு இப்படி ஒரு முகம்..

    ReplyDelete
  6. சந்தோஷ் said...
    "சந்தோஷம்! இன்னும் இராமுக்கு சந்தேகம் தீறவேயில்லை! இதுல இது வேற! //
    இன்னுமா சந்தேகம், அவரு தான்யா இவரு. கவிதை எழுதிகிட்டு கலாய்ச்சா நல்லா இருக்காதுன்னு இப்படி ஒரு முகம்.."

    எரியிற தீயில எண்ணவிடுற ஆள பார்த்து இருக்கேன் ஆனா சட்டியோட கவுக்கற ஆள இப்பதான்யா பார்க்குறேன்.

    ReplyDelete
  7. //B.Sc மூன்று வருடம் M.Sc இரண்டு வருடம் ஆக மொத்தம் நான்கு வருடம் //
    கணக்கு இடிக்கிதே!!!

    ReplyDelete
  8. Sathia said...
    //B.Sc மூன்று வருடம் M.Sc இரண்டு வருடம் ஆக மொத்தம் நான்கு வருடம் //
    கணக்கு இடிக்கிதே!!!

    ஹிஹிஹி கணக்குல கொஞ்சம் வீக்

    வாங்க நச்சத்திரமா இருந்தப்ப வந்தீங்க பிறகு இப்பதான்
    எட்டிபார்கிறீங்க..

    ReplyDelete
  9. இந்த பதிவில் என்ன எழுதியிருக்குனு என்னக்கு தெரியல
    இல்ல எனக்குதான் கண்ணு சரியா தெரியலையா இல்ல ஒன்னுமே எழுதலையா....???

    குசும்பா ஒனக்கு ஒவர் குசும்பு எதாவது எழுதி பதிவுபோடுயா
    இப்படி ஒன்னுமே இல்லாமல்
    பின்னுட்டத்துக்காக பதிவு போட்டா
    நல்லாவா இருக்கு

    ஐ நான் தான் ஃபஸ்ட்டு... :)

    ReplyDelete
  10. பத்த வச்சுட்டியே பரட்ட. . . . . . .

    உங்க பதிவுக்கெல்லாம் வந்து பின்னூட்டம் போட்டது குத்தமா . . . .

    சரி விடுங்க இதே மாதிரி நானும் 8 பேர சிக்க வைக்கனும்னு நினைக்கும் போது தான் மனசு நிம்மதியாகுது.

    ReplyDelete
  11. puyala vida vegama varudhey unga padhivu :-((

    Nethu saayandharam inguttu vandhuttu ponappo onnum illai.. 24 mani nerathula 2 padhiva???

    ReplyDelete
  12. :)
    nalla irrunga...

    ReplyDelete
  13. நல்ல வேளை.. நான் தப்பிச்சேன். :-D

    ReplyDelete
  14. குசும்பனுக்கு குசும்புக்கு குறைச்ச்ல் இல்ல.. ஹீஹீ

    ReplyDelete
  15. மிக மிக நல்ல பதிவு. மிக்க நன்றி குசும்பன்.

    தங்களின் முயற்சிகள் வெகு விரைவில் கைகூடவும் வாழ்த்துக்கள்

    சிவா
    sivaramang.wordpress.com

    ReplyDelete
  16. யாருக்காகவும் எதற்காகவும் என்னை, என் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாத பிடிவாதம், நீ நீயாக இரு நான் நானக இருக்கிறேன் எனது கொள்கை. (காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )

    good boy

    ReplyDelete
  17. //2) யாருக்காகவும் எதற்காகவும் என்னை, என் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாத பிடிவாதம், நீ நீயாக இரு நான் நானக இருக்கிறேன் எனது கொள்கை. (காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )//

    யாருக்காகவும் உங்கள மாத்திக்க மாட்டீங்கதான் மாமா. பட் கல்யானம் ஆகி உங்களுக்கு ஒரு குழந்தை வரட்டும், உங்க குழந்தைக்காக எப்படி வேண்டுமென்றாலும் மாற தயாரா இருப்பீங்க, உதாரணம் வேனும்னா என் அப்பாவ பாத்துகோங்க

    ReplyDelete
  18. யாருக்காகவும் உங்கள மாத்திக்க மாட்டீங்கதான் மாமா. பட் கல்யானம் ஆகி உங்களுக்கு ஒரு குழந்தை வரட்டும், உங்க குழந்தைக்காக எப்படி வேண்டுமென்றாலும் மாற தயாரா இருப்பீங்க, உதாரணம் வேனும்னா என் அப்பாவ பாத்துகோங்க//ஹி...ஹி..ஹீ.........சூப்பரு.மாறித்தானே ஆகனும்.......

    ReplyDelete
  19. //(காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )//
    ஐயோ பாவம்! அண்ணனுக்கு காதலியும் கிடைக்கலையாம், மனைவியும் கிடைக்கலையாம். இதுக்கு தான் போட்டோ எல்லாம் பதிவுல போடாதீங்கன்னு சொன்னேன்.

    ReplyDelete
  20. 2, 4, 5 மற்றும் 7 - சூப்பர்!! அப்படியே இருங்க!

    சரி, எனக்கு ஒருத்தரதான் தெரியும். இன்னும் ஒரு 7 பேரு எனக்கு அறிமுகப் படுத்துவீங்களா? பிரியாணி, கோட்டர் இலவசம் :)

    ReplyDelete
  21. \\நான் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு திறமையாக நினைப்பது உள்ளுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் "கிரியேட்டர்" அவன் ஒரு விளம்பர பிரியன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க அவன் டீவி யில் வருமே அந்த விளம்பர பிரியன் பல பொருட்களுக்கு பல மாதிரியாக விளம்பரம் எப்படி எடுக்கலாம் என்று யோசித்து எழுதி வைத்து இருப்பவன்\\


    'கிரியேட்டர்' தூக்கம் எப்போது கலையும்?
    .......உங்கள் அடிமனதிலிருக்கும் ஒரு ஆசை, கணவு,குறிக்கோள் புரிகிறது,
    சாதனை புரிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete