Friday, June 22, 2007

அண்ணன் பால பாரதிக்கோர் கடிதம்!!!

அண்ணன் பால பாரதி

நலம் நலம் அரிய அ(ல்)வா! தாங்கள் நடத்திவரும் பா.க.ச பற்றி இதுவரை நான் அறிந்திராதது என் துரதிஷ்டமே! நான் நண்பர் சிபி அவர்களிடம் அது என்னா பா.க.ச என்று அடி வெலுத்து எடுத்துவிட்டார், இங்கு புதிதாக கலாய்க்கும் பதிவு போட யார் வந்தாலும் அவர் கையில் பாபா துணை (பால பாரதி துணை) என்று பச்சை குத்தி காதில் 1)பால பாரதி 2)பால பாரதி 3)பால பாரதி என்று மூன்று முறை பெயரை சொல்லி அவர் சங்கத்தில் உறுப்பினறாக ஆன பின்பே பதிவு போடுவது வழக்கம், இதுவரை எப்படி நீ அவரை தெரியாமல் இருந்தாய் என்று அடித்தார்.

பின் சங்கத்தில் உருப்பினார் ஆனால் மாத மாதம் 5000ரூபாய் (சிபி அண்ணா நீங்க 500 என்றுதான் சொன்னீங்க இரண்டு மாசமா சம்பளம் வரல பால் பில், கரண்ட் பில் எல்லாம் கட்டவேண்டும் கண்டுக்காதீங்க). நீங்களே அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொன்னார். நான் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மண வாசகராக இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்து முன் தேதி இட்டு உறுப்பினர் அட்டை வழங்கி (அத்தனை மாதங்களுக்கும் சந்தா தொகையும்) என்னையும் அதில் உருப்பினர் ஆக்கிகொள்ளும் படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

என்னை பா.க.ச வில் சேர்த்துவிட்டதற்காண மார்கெட்டிங்(MLM) ராயல்டி பீஸ்சும் சிபி வேண்டாம் அதையும் குசும்பன் நீங்களேவாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார், ஆகையால் அந்த பணத்தையும் சேர்த்து என் பெயருக்கு அனுப்பி வைக்கும்படி கழுத்தில் கத்தி வைத்து பணிவோடு கேட்டுகொள்கிறேன்.....

உறுப்பினர் அடையாள அட்டையில் தாங்கள் இரத்ததினால் உறுப்பினர் பெயரை எழுதி அடையாளஅட்டை தருவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் என்று சிபி சொன்னார் என் பெயரை குசும்பன் என்று எழுதி விடாதீர்கள்.... திருவாடு துறை சிவ சிதம்பர கோவிந்த சாமி புஷ்பவனம் குப்புசாமி முனியசாமி கோவிந்தன் குசும்பன் என்று எழுதும் படி கேட்டுகொள்கிறேன்.

அன்புடன் குசும்பன்
பா.க.ச,
திருமங்கலம்,சென்னை
(பதிவு எண் : 1245678/07)

45 comments:

  1. //உறுப்பினர் அடையாள அட்டையில் தாங்கள் இரத்ததினால் உறுப்பினர் பெயரை எழுதி அடையாளஅட்டை தருவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் என்று சிபி சொன்னார் என் பெயரை குசும்பன் என்று எழுதி விடாதீர்கள்.... திருவாடு துறை சிவ சிதம்பர கோவிந்த சாமி புஷ்பவனம் குப்புசாமி முனியசாமி கோவிந்தன் குசும்பன் என்று எழுதும் படி கேட்டுகொள்கிறேன்.
    //

    :))

    கேட்டுக் கொல்கிறேன் என்றல்லவா இருக்க வேண்டும்!

    ReplyDelete
  2. //பின் சங்கத்தில் உருப்பினார் ஆனால் மாத மாதம் 5000ரூபாய் (சிபி அண்ணா நீங்க 500 என்றுதான் சொன்னீங்க இரண்டு மாசமா சம்பளம் வரல பால் பில், கரண்ட் பில் எல்லாம் கட்டவேண்டும் கண்டுக்காதீங்க)//

    அது சரி!

    பாலா அண்ணா ரொம்ப நல்லவரு! ன்னு உங்க வரைக்கும் தெரிஞ்சி போச்சா!

    ReplyDelete
  3. avaraiyum vithu vaikalaiya?

    ReplyDelete
  4. அது சரி புது மெம்பரா!? வர்ரதுக்குள்ள பாலாபாய்கிட்ட சில்லரை பிட்டு போடறீங்க!

    உங்களை பார்த்து தலம கலகம் பெருமைபடுது!

    ReplyDelete
  5. பின் சங்கத்தில் உருப்பினார் ஆனால் மாத மாதம் 5000ரூபாய் (சிபி அண்ணா நீங்க 500 என்றுதான் சொன்னீங்க இரண்டு மாசமா சம்பளம் வரல பால் பில், கரண்ட் பில் எல்லாம் கட்டவேண்டும் கண்டுக்காதீங்க)//

    அப்படியே பாலபாரதி தர்லேன்னாலும் சிபி தருவேன்னு சொல்லியிருப்பாயே

    ReplyDelete
  6. நாமக்கல் சிபி said...
    "கேட்டுக் கொல்கிறேன் என்றல்லவா இருக்க வேண்டும்!"

    பொன் முட்டையிடும் வாத்தை கொல்ல நான் என்ன மடையனா?

    ReplyDelete
  7. We The People said...
    பாலாபாய்கிட்ட "சில்லரை" பிட்டு போடறீங்க!

    என்னது உறுப்பினருக்கே 5000ரூபாய் சில்லரையா!!!அப்ப தலைக்கு ...??????? தப்பு செஞ்சிட்டியே குசும்பா..
    குசும்பா அப்ப கேளுடா 50000....

    ReplyDelete
  8. துர்கா|†hµrgåh said...
    avaraiyum vithu vaikalaiya?

    ஹிஹிஹி...

    ReplyDelete
  9. அரவக்குறிச்சிப்பட்டி எம் அசோக்ராஜா said...
    "அப்படியே பாலபாரதி தர்லேன்னாலும் சிபி தருவேன்னு சொல்லியிருப்பாயே "

    அத சொல்லலீயே!!! நிஜமாவா!!!

    ReplyDelete
  10. //பாலா அண்ணா ரொம்ப நல்லவரு! ன்னு உங்க வரைக்கும் தெரிஞ்சி போச்சா!//

    ஏது! சொல்லவே இல்ல!!

    எங்கள் பாலாவின் கெத்து தெரியாமல் வெறும் பிசாத்து 5000 ரூபாய் கேட்ட குசும்பனை வண்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  11. சீனு said...

    வாங்க சீனு தங்கள் முதல் வருகைக்கு நன்றி..

    "எங்கள் பாலாவின் கெத்து தெரியாமல் வெறும் பிசாத்து 5000 ரூபாய் கேட்ட குசும்பனை வண்மையாக கண்டிக்கிறேன்."

    பால பாரதியின் பெருமைகள் புத்தகம் தாமதமாகதான் கிடைக்க பெற்றேன்,
    இப்பொழுதுதான் படித்துக்கொண்டு இருக்கிறேன்..அதற்க்கு முன் போஸ்ட் செய்த போஸ்ட் இது ஆகையால் மண்ணிக்கவேண்டுகிறேன்..

    ReplyDelete
  12. தல பால பாரதி உங்கள் அக்கொண்ட் நம்பரை அவர் பதிவில் பின்னுட்டமாக போட சொன்னார்

    அப்பொழுது தான் செக் பாஸாகும்
    போட்டாச்சா.... :)

    ReplyDelete
  13. சிபி நம்ம மின்னல்
    சிபி சொல்லி கொடுத்தபடி நான் ராம் கிட்ட பேசிவிட்டதாகவும் ராம் போன் நம்பர் கொடுத்து போன் செய்ய சொன்னார் ஒன்னும் பிரச்சினை இல்லையே!!!

    திரும்ப திரும்ப சிபி சொல்லி கொடுத்த மாதிரி ராமிடம்
    பேசி இருக்கேன் அதேயே நீங்களும் மெயின்டெயின் செய்யுங்க என்றார்... ஒன்னும் புரியவில்லை...

    உங்களுக்கு ஏதும் புரிகிறதா??

    ReplyDelete
  14. ராமு கிட்ட பேசிட்டீங்கனு புரியுது... :)

    ReplyDelete
  15. அய்யா... சாமீ...

    வந்த வேகத்துலேயே இப்படி வேட்டு வெக்கிறியளே இது நாயமா?
    ஏதோ சிபி கெழப்பி வுட்டுட்டார்ன்னா... இப்படியா தனி பதிவு போட்டு தாக்குறது. எப்படா மாட்டுவேன்னு சங்கத்து ஆளுங்களெல்லாம் அலையுறாய்ங்க.. இது நீ வேற புதுசா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே! :((((

    ReplyDelete
  16. பாரபாரதி அவர்களே!!!
    சிபி என்பவர் மாபெரும் உத்தமர், நல்லவர், அவர் பொய் எல்லாம் சொல்ல மாட்டார். எனவே நீங்கள் உருப்பினர் அட்டையை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்..

    ReplyDelete
  17. குசும்பன் said...
    பாரபாரதி அவர்களே!!!
    சிபி என்பவர் மாபெரும் உத்தமர், நல்லவர், அவர் பொய் எல்லாம் சொல்ல மாட்டார்.
    //

    அவ்வளவு நல்லவனா நீயீ

    //
    எனவே நீங்கள் உருப்பினர் அட்டையை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்..
    //
    கேட்டு கொல்கிறேன்

    ReplyDelete
  18. குசும்பன் said...
    பாரபாரதி அவர்களே!!!
    சிபி என்பவர் மாபெரும் உத்தமர், நல்லவர், அவர் பொய் எல்லாம் சொல்ல மாட்டார்.
    //

    ஐயா சிபி அவர்களே இப்படி தங்களுக்கு தாங்களே புகழ்ச்சி நல்லாதா சொல்லுங்க.. :)

    ReplyDelete
  19. //பாரபாரதி அவர்களே!!!
    சிபி என்பவர் மாபெரும் உத்தமர், நல்லவர், அவர் பொய் எல்லாம் சொல்ல மாட்டார்.//

    அடப்பாவிகளா... இதுவே ஒலகத்துல பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய பொய்யு.
    இதுல இவர் அவர் சொல்லி என்னோட ரத்தத்தை காலி பண்ண பாக்குறார். நான் ஒத்துக்க மாட்டேன் போ!

    ஆமா... ஒங்களுக்கு தான் விடுமுறை இல்லைன்னா... சங்கத்துக்காவாது சனி,ஞாயிறு விடுமுறை கொடுங்கப்பா..!

    ReplyDelete
  20. //சிபி என்பவர் மாபெரும் உத்தமர், நல்லவர், அவர் பொய் எல்லாம் சொல்ல மாட்டார்//

    மக்களே!

    ஆப்பு எவ்வளவு அலங்காரமா தயாராகுது பாருங்க!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!

    ReplyDelete
  21. //ஏதோ சிபி கெழப்பி வுட்டுட்டார்ன்னா//

    நான் எதையும் கெழப்பி விடவில்லை!

    கெளப்புவது மட்டுமே என் வேலை!

    அடிப்படைத் தொண்டன்,
    பா.க.ச,
    திருமங்கலம்,சென்னை
    (பதிவு எண் : 1245678/07)

    ReplyDelete
  22. //எனவே நீங்கள் உருப்பினர் அட்டையை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்..
    //

    சும்மா,

    லுலூங்காட்டி வெளாடுவார்.
    ஆனா கண்டிப்பா அனுப்பிடுவார்!

    ReplyDelete
  23. அன்புள்ள சிபி
    அவர்களே! நான் இந்த பதிவையும்,

    "சிபி என்பவர் மாபெரும் உத்தமர், நல்லவர், அவர் பொய் எல்லாம் சொல்ல மாட்டார்."

    இந்த பின்னூட்டத்தையும் என் பெயரில், நான் போட்டால்
    5000ரூபார் தாங்கள் தருவீர்கள் என்று மின்னல் சொன்னார், இதுவரை வந்து சேரவில்லை நீங்கள் தரவில்லையா! அல்லது மின்னல் என்னிடம் தரவில்லையா!

    இனி பணம் வந்தால் மட்டுமே! அடுத்து நீங்கள் போட சொல்லி கொடுத்த சிபி வாழ்த்து பாட்டு (தாங்கள் எழுதிய கொடுத்த கவிதையை)
    என் பெயரில் போடுவேன். அந்த கவிதையில் சிபி வல்லல்
    என்று எழுதி இருந்தீர்கள் அதை வள்ளல் என்று மாற்றவா
    அல்லது அப்படியே போட்டுவிடவா?(பணம் வந்த பிறகுதான்).

    ReplyDelete
  24. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
    "என்னோட ரத்தத்தை காலி பண்ண பாக்குறார். நான் ஒத்துக்க மாட்டேன் போ!"

    மூத்த உறுப்பினர்களே பாலபாரதி இரத்தத்தால் கையெழுத்து போட்டு அடையாள அட்டை தர மறுக்கிறார், உங்கள் சங்கத்துக்கு ஒரு புது உறுப்பினர் வேண்டுமா வேண்டாமா?
    வேண்டும் என்றால் ஒரு ஒரு லிட்டர் பால பாரதி இரத்தமும், ஒரு பெயிண்டிங் பிரஷ்யும்
    அனுப்பவும் நானே எழுதிக்கிறேன்.

    "ஆமா... ஒங்களுக்கு தான் விடுமுறை இல்லைன்னா... சங்கத்துக்காவாது சனி,ஞாயிறு விடுமுறை கொடுங்கப்பா..! "

    பொதுவாழ்க்கைக்கு வந்த எங்களை போன்றவர்களுக்கு ஏது விடுமுறை. நாங்க வேறு சங்கம் வேறா?

    ReplyDelete
  25. எனக்கும் பா.க.ச.ல உறுப்பினர் அட்டை கிடைக்குமா? மாதம் 500ரூபாய்ன்னா சும்மாவா? ஹீஹீஹீ..

    ReplyDelete
  26. .:: மை ஃபிரண்ட் ::. said...
    "மாதம் 500ரூபாய்ன்னா சும்மாவா? "

    இது அடிப்படை உருப்பினர்களுக்கு 500ரூபாய்,
    ஆயுட்கால உருப்பினர், வெள்ளி அட்டை உருப்பினர்,
    தங்க அட்டை உருப்பினர் என்று பல வகை வைத்து
    இருக்கிறார்...இதில் எதை தேர்ந்து எடுக்கிறீர்களோ அதுக்கு
    தகுந்தது போல் பணம்...

    உறுப்பினர் ஆகுங்க பணத்தை அள்ளிக்கிட்டு போங்க!!!

    ReplyDelete
  27. : மை ஃபிரண்ட் ::. said...

    எனக்கும் பா.க.ச.ல உறுப்பினர் அட்டை கிடைக்குமா? மாதம் 500ரூபாய்ன்னா சும்மாவா? ஹீஹீஹீ..
    ///
    பணம் யாருக்கு வேணும் தல ரெத்தம்தான் எனக்கு வேணும்... :)

    ReplyDelete
  28. போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவோமா? ஒவ்வொரு உறுப்பினருக்கும் எவ்வளோ கமிஷன்.. ஹீஹீ..

    ReplyDelete
  29. மின்னல் அவர்களுக்கு காசோலை அனுப்பப்பட்டு விட்டது!

    இன்று சனிக்கிழமை என்பதால் ஒருவேளை கிரெடிட் ஆகாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

    (மின்னலையும் நம்ப முடியாது! எதற்கும் விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறேன்)

    அடுத்த விளம்பரப் பின்னூட்டத்தையும் வெளியிடவும். அதற்கும் சேர்த்துதான் ரூ10,000க்கு காசோலை மின்னல் பெயரில் அனுப்பப்பட்டது.

    வல்லல் என்பதை வள்ளல் என்று மாற்றிவிடவும். உம் தமிழ்ப்பற்று கண்டு கண்(ணாடி) கலங்குகிறேன்.

    ReplyDelete
  30. //எனக்கும் பா.க.ச.ல உறுப்பினர் அட்டை கிடைக்குமா? மாதம் 500ரூபாய்ன்னா சும்மாவா? ஹீஹீஹீ..
    //

    முதலில் ஒரு பா.க.ச பதிவிட்டு அடிப்படை உறுப்பினராக பதிவு செய்து கொல்லவும்.

    பின்னர் தங்கள் பா.க.ச கொள்கை ஈடுபாடு மற்றும் செயலொபாடுகளைப் பொறுத்து ஆயுட்கால வெள்ளி/தங்க அட்டைகள் தானாக வழங்கப்படும்.

    பா.க.ச,
    தலம அலுவலகம்,
    சென்னை.
    (பதிவு எண் : 1245677/07)

    ReplyDelete
  31. //"என்னோட ரத்தத்தை காலி பண்ண பாக்குறார். நான் ஒத்துக்க மாட்டேன் போ!"
    //

    இதை பா.க.ச ஆவியுலகக் கிளை ஒருபோதும் அனுமதிக்காது. அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம் என்பதை கடுமையான கண்டனத்துடன் தெரிவித்துக் கொல்கிறோம்!

    பா.க.ச,
    ஆவியுலகக் கிளை
    ஆவிகள் உலகம்.
    (பதிவு எண் : 1245679/07)
    ISO 9000 Certified

    ReplyDelete
  32. மின்னுது மின்னல் said...
    "பணம் யாருக்கு வேணும் தல ரெத்தம்தான் எனக்கு வேணும்... :) "

    மின்னலே உன் தல பக்தி (பதி பக்தி போல்) கண்டு பால பாரதி
    மெய்சிலிர்த்து விட்டதாகவும் அதற்க்கு பிரதிபலனாக மேலும் ஒரு லிட்டர் இரத்தம் வழங்குவார் என்பதை அவையடக்கத்தோடு
    தெரிவித்துக்கிறேன்.

    ReplyDelete
  33. நாமக்கல் சிபி said...
    "மின்னல் அவர்களுக்கு காசோலை அனுப்பப்பட்டு விட்டது!"
    "(மின்னலையும் நம்ப முடியாது! எதற்கும் விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறேன்)"
    "அடுத்த விளம்பரப் பின்னூட்டத்தையும் வெளியிடவும். அதற்கும் சேர்த்துதான் ரூ10,000க்கு காசோலை மின்னல் பெயரில் அனுப்பப்பட்டது."

    மின்னல் தாங்கள் விளக்கம் தரவும்..அதன் பின்பே சிபியின் வாழ்த்து பாடல் (சிபி எழுதிக்கொடுத்தது மெதுவாக படிக்கவும் யார் காதிலும் விழுந்து
    விடாமல்) போடப்படும்...

    ReplyDelete
  34. //பணம் யாருக்கு வேணும் தல ரெத்தம்தான் எனக்கு வேணும்... :)
    //

    மின்னல் சமீபத்தில்தான் பா.க.ச, ஆவியுலகக் கிளையில் சேர்ந்தார் என்பதை அறிவிக்கிறோம்!

    ReplyDelete
  35. //(பதி பக்தி போல்)//

    மின்னல் ஏற்கனவே இப்படி ஒரு கமெண்ட் போட்டுத்தான் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாரானாம்!

    ReplyDelete
  36. குசும்பன் said...
    நாமக்கல் சிபி said...
    "மின்னல் அவர்களுக்கு காசோலை அனுப்பப்பட்டு விட்டது!"
    "(மின்னலையும் நம்ப முடியாது! எதற்கும் விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறேன்)"
    "அடுத்த விளம்பரப் பின்னூட்டத்தையும் வெளியிடவும். அதற்கும் சேர்த்துதான் ரூ10,000க்கு காசோலை மின்னல் பெயரில் அனுப்பப்பட்டது."
    //

    இது எதிர் கட்சியின் சதியென கூறி கொல்கிறேன் மேலும் கருப்பு பணமாக குசும்பனிடம் நேரடியாகவே குடுக்க சொல்லிவிட்டேன் என்பதையும் இந்த மேட்டரை சிவாஜியிடம் சொல்லவில்லை என்பதையும் தெரிவித்து கொல்கிறேன்

    ReplyDelete
  37. ஆவி அம்மணி said...
    //பணம் யாருக்கு வேணும் தல ரெத்தம்தான் எனக்கு வேணும்... :)
    //

    மின்னல் சமீபத்தில்தான் பா.க.ச, ஆவியுலகக் கிளையில் சேர்ந்தார் என்பதை அறிவிக்கிறோம்!
    ///

    ஆவிகள் மட்டும்தான் ரெத்தம் குடிக்க வேண்டும் என்ற பழைய கோட்பாடுகளை தகற்தெறிய திருமங்கலம் பா க சவினர் தயாராக இருப்பதாக செய்திகள் வந்தவன்னம் உள்ளது

    ReplyDelete
  38. ada pavi avana neee. ennum pa.ka.sa vula seralaya? aga ethuku ne thaniya fine katanume... account number ah kelu anupi vekiren..

    ReplyDelete
  39. நன்னாயிட்டு லூட்டி அடிக்கிறீய்ங்கப்போய். ரசிக்கும்படியாக உள்ளது.

    //இது அடிப்படை உருப்பினர்களுக்கு 500ரூபாய்,
    ஆயுட்கால உருப்பினர், வெள்ளி அட்டை உருப்பினர்,
    தங்க அட்டை உருப்பினர் என்று பல வகை வைத்து
    இருக்கிறார்...இதில் எதை தேர்ந்து எடுக்கிறீர்களோ அதுக்கு
    தகுந்தது போல் பணம்...//


    என்னையும் உங்களோட பாகச வில சேத்துக்க சம்மதம்னா எனக்கு,

    அடிப்படை உறுப்பினர், ஆயுள்கால உறுப்பினர், வெள்ளி, தங்க, வைர, வைடூரிய, பிளாட்டின என இருக்கும் அனைத்து உறுப்பினர் அட்டையையும் அனுப்பி வையுங்கள்.

    அப்படியே ஒவ்வொரு அட்டையிலும் இரத்தத்தால் என் பெயரை குறிப்பிடும் பொழுது வெறுமனே இறை நேசன் எனக் குறிப்பிடாமல்,

    "போலிப் பெயர்களில் எழுதி மாட்டிக்கொண்ட பெண்கற்புப் புகழ் பார்ப்பன மாமாவுக்கு, செல்லும் இடமெல்லாம் ஆப்படிக்கும் இறை நேசன்" என்று மிகச் சுருக்கமாகவே குறிப்பிட கோருகின்றேன்.

    அன்புடன்
    இறை நேசன்
    (உறுப்பினர் அட்டைகள் வந்தப்புறமா பாகச கிளைகள்லாம் போடறேன்பா)

    ReplyDelete
  40. டெல்லி கிளையின் சார்பாக புதிய உறுப்பினரை கொலைவெறியோடு வரவேற்கின்றேன்..

    இவண்..

    பாகச டெல்லி கிளை செயலாளர்

    சென்ஷி

    ReplyDelete
  41. என்ன கும்பரே இவ்ளோ குட்டியூண்டு பேரு உமக்கு.
    விமல கோகில அபிநய சுந்தர பேச்சி செல்லாத்தா பங்கஜ பரிமள சாந்த விஜய ஜெய ஜெய ராஜ ராஜேஸ்வரி ன்னு சின்னதா வச்சிருக்கலாம்ல.

    ReplyDelete
  42. அய்யோ அய்யோ கண்மணி அக்கா....
    அது பெண்களுக்கு வைக்கும் பெயர்
    நான் ஆண் பிள்ளையாக்கும்...

    எனக்கு வைக்கு படி ஒரு பெயர் சொல்லுங்கோ பெயர் மாற்று விழா நடத்திவிடலாம்.

    ReplyDelete
  43. /////////////////////////////
    அந்த பணத்தையும் சேர்த்து என் பெயருக்கு அனுப்பி வைக்கும்படி கழுத்தில் கத்தி வைத்து பணிவோடு கேட்டுகொள்கிறேன்.....
    /////////////////////////////

    கடவுளே இந்த மாதிரி மக்கள் கிட்டேர்ந்து பால பாரதிய காப்பாத்துடா. . . . .

    ReplyDelete
  44. ஓ ..! அது நீங்களா. இது இதற்கு முதல் வாசிச்சனான் பின்னாட்டமிட நோ ரைம். அதாலை எஸ்க்கேப். ம்.. இப்ப எழுதினாப்போச்சு.

    ReplyDelete
  45. பாலாண்ணா பாவம்...

    ReplyDelete