Wednesday, June 20, 2007

சிபியின் கவிதைக்கு விமர்சனம்

மௌனத்தின் வேலிகள்
வார்த்தைகளின் வழியை அடைத்துவிட
(பங்காளி சண்டை போல வேலிய வழியில வச்சுட்டாங்க)
குற்றுயிராய்க் கிடந்த (ஹெவி ஆக்சிடண்ட் போல)

உணர்வுகள் மெல்ல எழுந்து எட்டிப் பார்க்கின்றன!
( வச்ச அலாராம் அடிச்சு ஊர்ல இருக்குறவன் எல்லாம் எழுந்துட்டான், இப்பதான் உணர்வு மெல்ல எட்டி பாக்குதா !!! அடிங்க)

ஒரு போதும்காத்திருத்தலின்
அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)
ஆனாலும் கணப்பொழுதும்
கலைந்துவிடாமல் காத்துக்கிடக்கிறேன்!


தேடி வந்தபட்டாம்பூச்சியும் என்
இருப்பை அறியாது
இறக்கைகளை களைப்புடன் (பூஸ்ட் குடி பட்டாம் பூச்சி)
கழற்றி வைக்கிறது! (அட மனுசனுக்குதான் டோப்பா முடி எல்லாம் இருக்குன்னு நினைச்சேன்!!!)

வந்த சுவடு தெரியாமல் தன்னை
மறைத்துக்கொள்ள
தவியாய்த்தவித்துக் கொண்டிருந்த
(ஒடி போய் சிபி பாக்கெட் குள்ள ஒளிஞ்சுக்க)

தவளை ஒன்றுபெருங்குரலில் சகாக்களை அழைக்கிறது!
(தாங்கெட்டது பத்தாதுன்னு கூட இருக்கிறவனையும் சேர்த்து கெடுக்குறது இதுதான் இதுதான்)

புறாக்கூடொன்று இருந்த

இடத்தில் பார்க்கும் குச்சிகளினூடே
பிய்க்கப் பட்ட புறாவின் இறகுகள் தெரிகிறது!
(ஏய் எடு எடு வீட்டுல பட்ஸ் தீந்து போச்சு)

கற்பனை உலகின் உறவுகள் நிஜத்தில் வராதுதான்!
ஆனாலும் காத்துக் கொண்டுதானிருக்கிறேன் கனவுகளில்!
நிஜவுலகின் நிசப்தங்கள் என்னைக் கலைத்தாலும் கூட!
(நீங்க என்ன கோலமா கலைக்க, இல்ல சீட்டு கட்டா கலைக்க!!!)

33 comments:

  1. தலைவா.. கோனார் நோட்ஸ மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டீகளோ??

    நல்லா தெள்ள தெளிவா விளக்கி இருக்கீக :-)

    ReplyDelete
  2. G3 said...
    தலைவா.. கோனார் நோட்ஸ மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டீகளோ??

    நல்லா தெள்ள தெளிவா விளக்கி இருக்கீக :-)

    என்னங்க நீங்க சொன்னத அப்படியே
    போட்டு இருக்கேன், இதுக்கு போய்
    என்ன புகழ்ந்துக்கிட்டு...எல்லா
    புகழும் g3 க்கே..:))))))))

    ReplyDelete
  3. //இதுக்கு போய்
    என்ன புகழ்ந்துக்கிட்டு...எல்லா
    புகழும் g3 க்கே..:)))))))) //

    கரெக்டா ராயல்டிய அனுப்பி விட்ருங்க ராசா :-))

    ReplyDelete
  4. G3 said...
    "கரெக்டா ராயல்டிய அனுப்பி விட்ருங்க ராசா :-)) "

    என்ன வாங்கினாலும் ஆளுக்கு பாதி பாதி... டீல் ஒக்கேவா?

    ReplyDelete
  5. //என்ன வாங்கினாலும் ஆளுக்கு பாதி பாதி... டீல் ஒக்கேவா? //

    வானரங்களா...கூட்டணியா ரெண்டு பேரும்? பாதி பாதி என்ன? ரெண்டு பேருக்கும் முழுசாவே குடுக்கறேன் இருங்க..

    ReplyDelete
  6. குசும்பன் வாழ்க.இப்படி புரியாத கவுஜ எல்லாம் புரியுற மாதிரி விளக்கி சொல்லுற ஒரே ஆளு நீங்கதான் போங்க.அடுத்தது யாரைக் கொலைப்பண்ணல்லாம் :D

    ReplyDelete
  7. "துர்கா|†hµrgåh said...
    குசும்பன் வாழ்க.இப்படி புரியாத கவுஜ எல்லாம் புரியுற மாதிரி விளக்கி சொல்லுற ஒரே ஆளு நீங்கதான் போங்க.அடுத்தது யாரைக் கொலைப்பண்ணல்லாம் :D "

    முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு ஹிட் லிஸ்ட் (நீங்க 1)சிவாஜி
    2) உன்னாலே உன்னாலேன்னு
    பட ஹிட் லிஸ்ட் அனுப்பிடாதீங்க)எடுத்து...அதன் படி வரிசையா போட்டு
    தாக்குவோம்...

    ReplyDelete
  8. " காயத்ரி said...
    //என்ன வாங்கினாலும் ஆளுக்கு பாதி பாதி... டீல் ஒக்கேவா? //

    வானரங்களா...கூட்டணியா ரெண்டு பேரும்? பாதி பாதி என்ன? ரெண்டு பேருக்கும் முழுசாவே குடுக்கறேன் இருங்க.. "


    g3 "வானரங்களா...கூட்டணியா ரெண்டு பேரும்?" கவுஜ
    எதிர்ப்பு கூட்டனியில் எத்தனை பேர் இருக்கிறேம்
    என்று தெரியாம காயத்ரி நம்மள் சீண்டிட்டாங்க

    g3 என்ன செய்யலாம்

    ReplyDelete
  9. //////////////////////////
    குற்றுயிராய்க் கிடந்த (ஹெவி ஆக்சிடண்ட் போல)
    //////////////////////////

    குற்றுயிராய்க் கிடந்த (தலைக்கவசம் இல்லாததால ஹெவி ஆக்சிடண்ட் போல)

    //////////////////////////
    ஒரு போதும்காத்திருத்தலின்
    அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)
    ஆனாலும் கணப்பொழுதும்
    கலைந்துவிடாமல் காத்துக்கிடக்கிறேன்!
    //////////////////////////

    ஒரு போதும்காத்திருத்தலின்
    அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)
    ஆனாலும் கணப்பொழுதும்
    கலைந்துவிடாமல் காத்துக்கிடக்கிறேன்!
    (அவசியம் இல்லேங்குற காத்துகிடக்கேங்குற குழப்புறியே . . . .)

    நம்ம குசும்பு எப்படி குசும்பன்.

    உங்கள மாதிரி எழுத முடியுமா . . . . .

    ReplyDelete
  10. அருமையான விளக்கம். ஆழ்ந்த உட்கருத்து.

    இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!

    :)

    ReplyDelete
  11. //அடுத்தது யாரைக் கொலைப்பண்ணல்லாம்//

    ஒரு திட்டத்தோடதான் திரியறீங்களா?

    ரமணா மாதிரி ரகசிய லிஸ்ட் எடுங்க!

    ஃபர்ஸ்ட் 10 பேரை போட்டுத் தள்ளுங்க!

    நாங்க எல்லாம் பொழைச்சிப் போயிடுறோம்!

    ReplyDelete
  12. //முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு ஹிட் லிஸ்ட் //

    ஆப்புரேசன் கவுஜர்ஸ்!

    இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  13. //முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு ஹிட் லிஸ்ட் (நீங்க 1)சிவாஜி
    2) உன்னாலே உன்னாலேன்னு
    பட ஹிட் லிஸ்ட் அனுப்பிடாதீங்க)எடுத்து...அதன் படி வரிசையா போட்டு
    தாக்குவோம்...
    //

    இனிமேல் நான் பதிவே எழுத மாட்டேன்.ஆகவே நான் ஹிட் லிஸ்ட்லில் இருக்க முடியாது,
    அடுத்தது நம்ப கவிதாயின் காயத்ரி ஒகேவா?அம்மணி வேற உங்கள குரங்குன்னு சொல்லிட்டாங்க :D

    ReplyDelete
  14. வெங்கட்ராமன் said...
    "நம்ம குசும்பு எப்படி குசும்பன்."

    அடிக்கடி நம்ம பிளாக் பக்கம் வரும்பொழுதே நினைச்சேன்
    புள்ளைக்கு என்னமோ ஆவபோவுதுன்னு..

    சூப்பர்...

    ReplyDelete
  15. நாமக்கல் சிபி said...
    அருமையான விளக்கம். ஆழ்ந்த உட்கருத்து.

    "இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!"

    :)

    இனிமே வேற கவிதையா??? ஐய்யா ஏன் ஏன் இப்படி???

    ReplyDelete
  16. நாமக்கல் சிபி said...

    "ஃபர்ஸ்ட் 10 பேரை போட்டுத் தள்ளுங்க!"

    கிடா வெட்டும் முன் ஆட்டு தன்ன வெட்ட போறாங்கன்னு
    தெரியாமயே மண்டைய மண்டைய ஆட்டும்....அது போலதான் இது

    நாங்க எல்லாம் பொழைச்சிப் போயிடுறோம்!

    ஆவியாவா???

    ReplyDelete
  17. துர்கா|†hµrgåh said...
    "நம்ப கவிதாயின் காயத்ரி ஒகேவா?அம்மணி வேற உங்கள குரங்குன்னு சொல்லிட்டாங்க :D "

    அந்த புள்ளையாவது டீசன்டா வாணரம்ன்னு சொன்னுச்சு..

    இந்த புள்ள அத மொழி பெய்ர்த்து சொல்லுது....

    ReplyDelete
  18. //அந்த புள்ளையாவது டீசன்டா வாணரம்ன்னு சொன்னுச்சு..

    இந்த புள்ள அத மொழி பெய்ர்த்து சொல்லுது.... //

    ரெண்டும் தமிழ்தான் குசும்பன் :)
    நான் என்ன இங்கீலிஷ்லியா மொழி பெயர்த்து சொன்னேன் :D

    ReplyDelete
  19. நாமக்கல் சிபி said...
    //முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு ஹிட் லிஸ்ட் //

    ஆப்புரேசன் கவுஜர்ஸ்!

    பாவம் சிபி நீங்க! இப்படி அப்பாவியா இருக்கீக்ங்க.
    கவுஜர்ஸ் லிஸ்ட்ல நீங்களும் இருக்கிறது தெரியாம ஆப்ரேசனுக்கு பேர் வக்கீறீங்களே!!! அம்புட்டு நல்லவரா
    நீங்க!!!

    ReplyDelete
  20. துர்கா|†hµrgåh said... நான் என்ன இங்கீலிஷ்லியா மொழி பெயர்த்து சொன்னேன் :D

    ஏங்க உங்களுக்கு அந்த ஒரு குறை
    ஆங்கிலம், உங்களுக்குதான் மலாய் தெரியுமே அதிலேயும், வேற என்ன என்ன மொழியில எல்லாம் உங்களுக்கு மொழி பெயர்க்க தெரியுமோ
    மொழிபெயர்த்து..குசும்பனையும், g3 யையும் ..........அப்படின்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லிட்டு
    நிம்மதியா தூங்குங்க...

    ReplyDelete
  21. // நாமக்கல் சிபி said...
    அருமையான விளக்கம். ஆழ்ந்த உட்கருத்து.

    இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!


    :)//

    இது தொடர்கதையா(கவிதை எழுதறது)

    யாராவது வலையுலக மக்கள காப்பாத்துங்களேன்.

    ReplyDelete
  22. J K said...
    "
    யாராவது வலையுலக மக்கள காப்பாத்துங்களேன்."

    வாங்க JK தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    ரமணா ஸ்டைலில் நானும் துர்க்காவும் சேர்ந்து ஆப்புரேசன் கவுஜர்ஸ்!
    ஆரம்பிச்சு இருக்கோம்..கவலை படாதீங்க..

    ReplyDelete
  23. குசும்பா, சூப்பர் விமர்சனம்..

    //அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)//

    ஷேர் ஆட்டோவா இருக்கும் :)

    //இறக்கைகளை களைப்புடன் (பூஸ்ட் குடி பட்டாம் பூச்சி) //

    பட்டாம்பூச்சி ய சச்சினுக்கு போட்டியா .... நல்ல திட்டம் :)

    //நிஜவுலகின் நிசப்தங்கள் என்னைக் கலைத்தாலும் கூட!
    (நீங்க என்ன கோலமா கலைக்க, இல்ல சீட்டு கட்டா கலைக்க!!!)//

    இல்லை நீங்க என்ன சட்டசபையா?? :)

    வீ எம்

    ReplyDelete
  24. வீ. எம் said...
    "குசும்பா, சூப்பர் விமர்சனம்.."

    வாங்க வீ.எம் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..

    "இல்லை நீங்க என்ன சட்டசபையா?? :)"

    சிபி பார்த்துக்குங்க எத்தனை பேர் சேருகிறோம் என்று...

    ReplyDelete
  25. நாமக்கல் சிபி said...
    "இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!

    :) "

    இது என் மேல் உள்ள அன்பா, இல்லை தண்டனையா?

    ReplyDelete
  26. //இது என் மேல் உள்ள அன்பா, இல்லை தண்டனையா?//

    அளவுக்கு மீறினா அன்பும் தண்டனையாத்தான் தெரியும்!

    :)

    ReplyDelete
  27. இதுக்குதான் அடுத்த கவிதை எப்போனு போன் பண்ணி கேட்டுங்களா

    ஆளா வுடு சாமி...:)

    ReplyDelete
  28. மின்னுது மின்னல் said...
    "இதுக்குதான் அடுத்த கவிதை எப்போனு கேட்டுங்களா"

    மின்னல் அது சும்மா உங்க ரசிகனா நான் கேட்டது, நான் உங்க கவிதைக்கு A/C
    உங்கள போய் கலாய்க்கிறதாவது...

    ReplyDelete
  29. சுவாமி பித்தானந்தா said...
    "அளவுக்கு மீறினா அன்பும் தண்டனையாத்தான் தெரியும்!"


    மிக்க சரி

    ReplyDelete
  30. //என்ன வாங்கினாலும் ஆளுக்கு பாதி பாதி... டீல் ஒக்கேவா? //

    இதுல கொஞ்சம் வில்லங்கம் இருக்கே.. ஒரு குட்டி கரெக்ஷன்.. பாராட்டு பரிசெல்லாம் வந்தா நமக்கு பாதி பாதி.. திட்டு உதை எல்லாம் வந்தா கவிதைய எழுதினவங்களுக்கே முழுசா குடுத்துடுவோம்.. இந்த டீல் ஒ.கே.வா??

    ReplyDelete
  31. //g3 "வானரங்களா...கூட்டணியா ரெண்டு பேரும்?" கவுஜ
    எதிர்ப்பு கூட்டனியில் எத்தனை பேர் இருக்கிறேம்
    என்று தெரியாம காயத்ரி நம்மள் சீண்டிட்டாங்க

    g3 என்ன செய்யலாம் //

    அவங்க ப்ளாக்ல போய் நம்ம வேலைய காட்டலாம்னு பாத்தேன்.. ஆனா அவங்க இன்னும் புது போஸ்ட் போடாம டபாய்க்கறாங்களே :-((

    ஒரு வேளை நமக்கு பயந்து தான் சைலண்டா இருக்காங்களோ???

    ReplyDelete
  32. G3 said...
    "ஒரு வேளை நமக்கு பயந்து தான் சைலண்டா இருக்காங்களோ??? "

    அட நீங்க வேற பக்கத்து வீட்டுல இருக்கிற ஒன்னாவது படிக்கிற பையன் கூட பயப்பட மாட்டேங்கிறான்...வந்து அடி வெளுத்து எடுத்துட்டு
    போறான்...60 வயசு பாட்டி எப்படி நமக்கு பயப்படும்

    ReplyDelete
  33. கவிதையின் அழம் அருமை. ஆனா உங்கடை லொள்ளு தாங்க முடியலை

    ReplyDelete