Sunday, June 17, 2007

ப.பா சங்கம் வ.வா சங்க விளக்கம்

ப.பா சங்கம் வ.வா சங்கம்

மதுரையில் தமிழ் வளர்த்த தமிழ்சங்கம் போல் இணையத்தில் தமிழ் வளர்க்கும் சங்கள் பல இருந்தாலும் அதில் முக்கியமானவை வ.வா சங்கமும், ப.பா.சங்கமும், (ஸ்ஸ் அச் அச் என்ன ப.பா. கொள்கை பரப்பு செயலார் காயத்ரி தும்மல், அச் அச் அது யாரு இன்னொரு தும்மல் வ.வா தலைவர் ராம்)

இப்படி இரு சங்கங்கள் இருந்தாலும் என்னை போன்ற புதியவர்களுக்கு ப.பா சங்கம், வ.வா.சங்கம் என்றால் என்ன என்று ஒரே குழப்பம். சரி இனையத்துல இருக்குற பெரியவங்க கிட்ட கேட்களாம் என்றால், ஏன் அவரிடம் கேட்டாய் என்று திட்டி பதில் வருகிறது. சரி எதுக்கு
வம்பு சம்மந்த பட்டவர்களிடமே கேட்டுவிடலாம் என்று ஆனா அவங்களிடமே போய் உங்க சங்கத்துக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்டால் ஏய் இது தெரியாம இன்ன இதுக்கு நீ எல்லாம் blog ஆரம்பிச்ச என்று கேட்டுவிட்டால் என்ன செய்யிறது...ஆகையால் இவங்கள பத்தி அவுங்க கிட்ட கேட்போம், அவுங்கள பத்தி இவுங்க கிட்ட கேட்போம்...என்று சூப்பர் ஐடியா வந்தது...

அதன் படி நான் முதலில் ப.பா சங்கத்துக்கு போன் போட்டேன் இனி நடந்தது அப்படியே உங்கள் பார்வைக்கு.....

பல்லேலக்கா பல்லேலக்கா பல்லேலக்கா...(ரிங் டோனுங்க டிரிங் டிரிங் எல்லாம் ஒல்ட்)...

எதிர் முனையில் ஹலோ என்றது ஒரு பெண் குரல்...

நான்: என்னங்க இது ப.பா சங்கம்தானே...

எதிர் முனை: ஆமாம் உங்களுக்கு என்ன வேனும்...

நான்: ஒரு சின்ன சந்தேகம்...

எதிர் முனை: சின்ன சந்தேகம்ன்னா என்ன கடுகு சைஸ் இருக்குமா? என்ன சந்தேகம்...

நான்: இல்ல வ.வா சங்கம்ன்னா என்னங்க அதுக்கு என்ன விளக்கம் என்று கேட்டேன்.

எதிர் முனை: கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே (அப்படி சிரிச்சாங்க, டெலி போன் மணி போல் எல்லாம் இல்லை).

என்னய்யா இப்படி கேட்டுப்புட்ட வ.வா சங்கம் என்றால் உனக்கு தெரியாதா? சரி இங்க பாரு வ.வா சங்கம் வ.வா சங்கம்னு திரும்ப திரும்ப 100 முறை சொல்லு...

நான் : என்னங்க தெரியாம உங்க கிட்ட கேட்டா இப்படி சொல்ல சொல்றீங்க

எதிர் முனை: உனக்கு பதில் வேணும்ன்னா வடிவேலு மாதிரி திரும்ப திரும்ப வேகமா சொல்லு ..

நான்: 1)வ.வா சங்கம் , 3)வ.வா.சங்கம் 4)வ.வா சங்கம் , 5)வ.வா.சங்கம் 6)வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம், வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம், வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வவ்வா சங்கம், வவ்வா சங்கம்,வவ்வா சங்கம்.....

எதிர் முனை: நிறுத்து நிறுத்து...இப்ப என்ன சொன்ன

நான்: வவ்வா சங்கம்ன்னேன்..

எதிர் முனை: வவ்வா எப்படி தொங்கும்?

நான் : தலை கீழா தொங்கும்...

எதிர் முனை: எங்க கிட்ட வகையா வாங்கி கட்டி கடைசியாய் தலை கீழாய் தொங்க விட்டு விடுவோம் அதானால தான் அந்த பேரு.. வகையா வாங்கி கட்டிகொள்வோர் சங்கம்.


(நாரயண நாரயாண நாரயண நாரயாண நாரயண நாரயாண பிண்ணனி இசை).


அடுத்து போன் போட்டது வ.வா சங்கம்....

டிரிங் டிரிங்...

ஹலோ யார் பேசுறது இது வ.வா சங்கமா?

சங்கத்து சிங்கம் பேசுறேன் நீ யாரு?

நான்: எனக்கு ஒரு சந்தேகம் அத தீர்த்துக்க தான் போன் செய்தேன்...

ச.சி: என்ன பின்லேடன் எங்க இருக்கான்னு தெரியனுமா?

நான்: இல்ல ப.பா சங்கம்னா என்னா?

ச.சி: கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் (குறட்டை இல்லிங்க சங்கத்து சிங்கம் சிரிக்குது).

நான்: என்ன இப்படி சிரிக்கிறீங்க??

ச.சி: ஏன் வேற மாதிரி சிரிச்சு காட்டவா?

நான் : வேண்டாம் வேண்டாம் என் சந்தேகத்த தெளியவைங்க...


ச.சி: அப்ப ஒரு சோடா வாங்கி வா!!!

நான் : ஏங்க மிக்ஸிங்கு ஒன்னும் இல்லையா!!!

ச.சி: நீதானே தெளியவைங்கன்னு சொன்ன அதான் சோடா அடிச்சா தெளியும்.... (கர் கூர் கர் கூர் கர் கூர் கர் திரும்பவும் அதே சிரிப்பு)

நான் : ஏங்க என்ன பார்த்தா பாவமா தெரியல என்ன வச்சு இப்படி மொக்கை காமெடிசெய்யிறீங்க....

ச.சி: ப.பா சங்கம் ப.பா சங்கம்ன்னு ஒரு 100 முறை கிடு கிடு கிடுன்னு சொல்லு..

நான்: ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம்
ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ...பப்பா சங்கம் பப்பா சங்கம் பப்பா சங்கம்....

ச.சி: நிறுத்து நிறுத்து.... நீ என்ன சொன்னேன்னு பார்த்தீயா பப்பா சங்கம்ன்னு சொல்லுற... சின்ன பப்பாங்கலா சேர்ந்து ஆரம்பிச்ச சங்கம் தான் அது கால போக்குல அது ப.பா சங்கம் என்று ஆயிட்டு இதுக்கு தமிழில் மருவு என்று பெயர்.

நான்: மருவோ பருவோ விளையாடாம உண்மைய சொல்லுங்க என்றதற்க்கு

ச.சி: சிங்கத்த பார்த்தா சின்ன மான் என்ன பண்ணும்?

நான்: பயந்து ஓடி போகும்..

ச.சி: சும்மா ஓடாது பயந்து பாய்ந்து ஓடுவதால் அவுங்களுக்கு ப.பா சங்கம் என்று பெயர்.

(நாரயண நாரயாண நாரயண நாரயாண நாரயண நாரயாண பிண்ணனி இசை)

40 comments:

  1. //(நாரயண நாரயாண நாரயண நாரயாண நாரயண நாரயாண பிண்ணனி இசை).
    //

    :)

    பொருத்தமான இசைதான்!

    நாராயண!

    ReplyDelete
  2. ":)

    பொருத்தமான இசைதான்!

    நாராயண! "

    இசை யாரோ டப்பிங் கொடுக்கிறார்கள், தென்னாலியில்
    கமல் உதட்டை குவிக்கும் பொழுது எலி டப்பிங் கொடுத்து மாட்டிவிட்டது போல்...

    நான் ஒரு அப்பாவிங்க....

    ReplyDelete
  3. யோவ்,

    யாருய்யா நீயி? இப்பிடி போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கி வைச்சிருக்கே??? ;-)

    நான் தலைவர் இல்லை.... தல கைப்புள்ள'தான் என்றென்றும் வ.வா.சங்கத்தின் தலைவர்....

    ReplyDelete
  4. இராம் தங்கள் முதல் வருகைக்கு நன்றி...

    "இராம் said...
    யோவ்,

    யாருய்யா நீயி? இப்பிடி போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கி வைச்சிருக்கே??? ;-)"

    உங்கள் நலம் விரும்பிங்கோ!!!!! உங்களுக்கு டவுட்டா இருந்தா
    சிபி கிட்ட கேட்டுக்குங்கோவ்...

    அது சரி சங்கத்து சிங்கம் என்று பேசினது நீங்கதானா?(நாரயண நாரயாண நாரயண நாரயாண நாரயண )

    ப.பா சங்கத்துல இருந்து ஆள்விட்டு தேடுறாங்களாம்...யார் அப்படி
    சொன்னது என்று..

    ReplyDelete
  5. நான் தலைவர் இல்லை.... தல கைப்புள்ள'தான் என்றென்றும் வ.வா.சங்கத்தின் தலைவர்....
    //

    நல்லா சத்தமா கூவு உட்டுடுறோம்
    :)

    ReplyDelete
  6. "மின்னுது மின்னல் said...
    நான் தலைவர் இல்லை.... தல கைப்புள்ள'தான் என்றென்றும் வ.வா.சங்கத்தின் தலைவர்....
    //

    நல்லா சத்தமா கூவு உட்டுடுறோம்
    :) "

    கூகூகூகூகூகூ

    ReplyDelete
  7. //இசை யாரோ டப்பிங் கொடுக்கிறார்கள், தென்னாலியில்
    கமல் உதட்டை குவிக்கும் பொழுது எலி டப்பிங் கொடுத்து மாட்டிவிட்டது போல்...
    //

    :))))))))))))

    அது சரி!

    //நான் ஒரு அப்பாவிங்க.... //

    பார்றா!

    :))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  8. //நான் தலைவர் இல்லை.... தல கைப்புள்ள'தான் என்றென்றும் வ.வா.சங்கத்தின் தலைவர்.... //

    ஹிஹி.. எங்க தலைக்கு தன்னடக்கம் சாஸ்தி!

    :)

    ReplyDelete
  9. யாருலே அது குசும்பன் இந்த நாரதர் வேலை வேண்டாம்லே.ஏதோ வ.வா.ச காரங்க பொழைச்சிப் போட்டமின்னு பாப்பாக்கள் அடக்கி வாசிக்குது.
    நான் யாருன்னு கேக்கியாலே?நாந்தான் சங்கத்துக் கொரடா...[சிங்கங்களுக்கு பல்லு புடுங்கும் கொரடா இல்லை]
    நல்ல காமெடி மிஸ்டர் குசும்பன்

    ReplyDelete
  10. ":))))))))))))

    அது சரி!

    //நான் ஒரு அப்பாவிங்க.... //

    பார்றா!

    :)))))))))))))))))))))))))))) "

    நீங்களாவது என்னை நம்பினா சரி....

    ReplyDelete
  11. சிபி என்னங்க சங்கத்து சிங்ககள பத்தி இப்படி சொன்னதால நீங்க கோப பட்டு ப.பா சங்கத்து மேல போர் நடவடிக்கை எடுக்க போவதாகவும்,ரகசியமாக தாக்குதல் நடவடிக்கை பற்றி பிளான் போட்டு கொண்டு இருப்பதாகவும் மின்னல்
    சொன்னார், நிஜமாவா!!!

    என் காதோடு ரகசியமாக சொல்லுங்க...

    உங்களுக்குதான் நான் ரகசியத்தை எப்படி கட்டி காப்பேன் என்று உங்களுக்கு தெரியும்... எப்பொழுது
    போர்...????

    ReplyDelete
  12. என் காதோடு ரகசியமாக சொல்லுங்க...
    ///







    (கேட்டுச்சா...)

    ReplyDelete
  13. குசும்பன் said...
    சிபி என்னங்க சங்கத்து சிங்ககள பத்தி இப்படி சொன்னதால நீங்க கோப பட்டு ப.பா சங்கத்து மேல போர் நடவடிக்கை எடுக்க போவதாகவும்,ரகசியமாக தாக்குதல் நடவடிக்கை பற்றி பிளான் போட்டு கொண்டு இருப்பதாகவும் மின்னல்
    சொன்னார், நிஜமாவா!!!
    //

    போர் நடந்துகிட்டு இருக்கு இப்ப போயி கேட்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை...:)

    ReplyDelete
  14. "ஹிஹி.. எங்க தலைக்கு தன்னடக்கம் சாஸ்தி!

    :) "

    போர் வந்துடுமோன்னு நான் தலைவர் இல்லைன்னு
    சொல்லுறாரா?...

    அதுனால என்ன நீங்க போர்க்கு தலைமை தாங்குங்க..(உங்கள் மேல் அதிகம் அன்பு கொண்ட குசும்பன்)

    ReplyDelete
  15. வாங்க கண்மணி தங்கள் முதல் வருகைக்கு நன்றி..
    .
    கண்மணி said...
    "இந்த நாரதர் வேலை வேண்டாம்லே."

    இப்பதான் நீங்க நாரதர்வேலை வேண்டாம் என்று சொல்றீங்க,
    ஏன் உங்களுக்கு புரோமோசன் கொடுத்துட்டாங்களா???

    "ஏதோ வ.வா.ச காரங்க பொழைச்சிப் போட்டமின்னு பாப்பாக்கள் அடக்கி வாசிக்குது."

    நோட் த பாயின்ட் யுவர் ஹானர்...(சிபி, இராம் பார்த்துக்குங்க).

    ReplyDelete
  16. அதுனால என்ன நீங்க போர்க்கு தலைமை தாங்குங்க..(உங்கள் மேல் அதிகம் அன்பு கொண்ட குசும்பன்)
    ///

    முன்வரிசையில் உங்களை நிறுத்த ஆசை வசதி எப்படி..???

    ReplyDelete
  17. "ஏதோ வ.வா.ச காரங்க பொழைச்சிப் போட்டமின்னு பாப்பாக்கள் அடக்கி வாசிக்குது."
    //

    அடக்கி வாசிச்சாதான் பொழைக்க முடியுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கு...:)

    ReplyDelete
  18. ரகசியம் சொல்பவன் said...
    என் காதோடு ரகசியமாக சொல்லுங்க...
    ///







    (கேட்டுச்சா...) "

    என்னது வ.வா சங்கத்த காலி பண்ண யானை படை,
    குதிரை படை எல்லாம் வருகிறதா...முக்கியமாக
    இராம், சிபி, சிபியின் தளபதி மின்னல் இவுங்கள உயிரோடு பிடித்து தருபவர்களுக்கு 10000 பொற்காசுகளா???

    ReplyDelete
  19. என்னது வ.வா சங்கத்த காலி பண்ண யானை படை,
    குதிரை படை எல்லாம் வருகிறதா...முக்கியமாக
    இராம், சிபி, சிபியின் தளபதி மின்னல் இவுங்கள உயிரோடு பிடித்து தருபவர்களுக்கு 10000 பொற்காசுகளா???
    ///

    பொற்காசு எனக்குதான்

    ReplyDelete
  20. மின்னுது மின்னல் said...
    குசும்பன் said...

    "போர் நடந்துகிட்டு இருக்கு இப்ப போயி கேட்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை...:) "

    போர் மட்டும் நடக்குது நீங்க மட்டும் ஏன் ரிவர்ஸ்ல ஓடுறீங்க தளபதி
    மின்னல்... போர்ல முதுகு காட்ட கூடாதுங்குறதுக்காக ரிவர்ஸ்ல ஓடுறீங்களா சரி சரி ஓடுங்க....

    ReplyDelete
  21. "முன்வரிசையில் உங்களை நிறுத்த ஆசை வசதி எப்படி..??? "

    நான் எல்லாம் சமாதான புறாங்க எனக்கு இந்த சண்டை,போர் இதுல
    எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது...

    ReplyDelete
  22. :D
    நீங்க குசும்பனா இல்லை நாரதரா?
    சிங்கங்களும் பாப்பகளும் வந்து களம் இறங்க போறாங்கப்பூ.பார்த்து இருங்க.

    //ச.சி: சும்மா ஓடாது பயந்து பாய்ந்து ஓடுவதால் அவுங்களுக்கு ப.பா சங்கம் என்று பெயர்//

    அவுங்க எல்லாம் மத்தவங்களை தான் ஓட விட்டு பழக்கம்.அவுங்களே ஓட மாட்டங்க :D
    நல்ல சிரிச்சேன் குசும்பன்.நன்றி

    ReplyDelete
  23. "துர்கா|†hµrgåh said...

    "நீங்க குசும்பனா இல்லை நாரதரா?
    சிங்கங்களும் பாப்பகளும் வந்து களம் இறங்க போறாங்கப்பூ.பார்த்து இருங்க."

    நான் 100% குசும்பன்தாங்க யாரோ நடுவுல போன் அட்டன் செய்தவர்கள் இப்படி நாரதர் வேலை செஞ்சு இருக்காங்க...

    நான் அவர்கள் சொன்ன விளக்கம் உண்மை என்று நம்பி போட்டுவிட்டேன்...அப்ப அவுங்க ஏதும் பொய் சொல்லி இருக்காங்கலா?

    நான் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பகூடிய ஆளுங்க...

    "பார்த்து இருங்க."

    மடியில் கணம் இருக்குறவன் தானே பயப்படனும்...நான் ஏன் பயப்படனும்.....

    ReplyDelete
  24. நாரதரே! வந்தவேலை முடிந்ததா?

    (எப்படியோ சண்டை மூட்டி விட்டுடீங்க!!)

    ReplyDelete
  25. இவங்க சண்டை போட்டாதான் நாம நாலு இடுகை போடலாம்! டைம் பாஸ் ஆகும்!

    ReplyDelete
  26. குட்டிபிசாசு said...
    நாரதரே! வந்தவேலை முடிந்ததா?

    (எப்படியோ சண்டை மூட்டி விட்டுடீங்க!!)

    யார் யார்க்கு சண்டை யார் மூட்டிவிட்டது...

    ReplyDelete
  27. சங்கத்துல அட்மிஷன் வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க
    அதுக்கு ஏன் இப்படி ஒரு சண்டை மூட்டும் பதிவு (BGM நாராயண, நாராயண,நாராயண, நாராயண, நாராயண, நாராயண )

    [என்ன ஒரு நல்ல பதிவு????!! நற..நற..நற... வாழ்க வளமுடன்.]

    ReplyDelete
  28. //அவுங்க எல்லாம் மத்தவங்களை தான் ஓட விட்டு பழக்கம்.அவுங்களே ஓட மாட்டங்க :D//

    அது!!

    ReplyDelete
  29. ஏப்பா தம்பி! ரெண்டு சங்கமும் யார எப்பிடி சிரிக்க வெக்கலாம்.. யாருக்கு என்ன உதவி பண்ணலாம் கிடையா கிடந்து தவிச்சிச்சிட்டிருக்கு. நீ என்ன இடையில வந்து சிண்டு முடியற? வேனும்னா ரெண்டு பக்கமும் கேட்டு சங்க உறுப்பினர் அடையாள அட்டை வாங்கி வெச்சிக்கோ! அப்புறம் பாரு.. உனக்கு கிடைக்கிற மரியாதைய!! :))

    ReplyDelete
  30. அண்ணாத்த!!
    நீங்க கோயமுத்தூர் பக்கமா??

    குசும்பு கொஞ்சம் ஓவாராய்த்தான் இருக்கு!! ;-D

    படித்தேன்
    சிரித்தேன்
    ரசித்தேன்!!

    வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  31. சிவா said...
    "சங்கத்துல அட்மிஷன் வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க
    அதுக்கு ஏன் இப்படி ஒரு சண்டை மூட்டும் பதிவு (BGM நாராயண, நாராயண,நாராயண, நாராயண, நாராயண, நாராயண )"

    [என்ன ஒரு நல்ல பதிவு????!! நற..நற..நற... வாழ்க வளமுடன்.]

    ஏன் இப்படி ஒரு சண்டை மூட்டும் பதிவு ?( BGM சிவ சிவா சிவ சிவா சிவ சிவா சிவ சிவா!!!) என்ன போய் என்ன போய் இப்படி ஒரு வார்தை சொல்ல
    எப்படி உங்களுக்கு மனசு வந்தது....

    வாழ்கவையகம் ...வாழ்கவளமுடன்

    ReplyDelete
  32. "காயத்ரி said...
    ஏப்பா தம்பி! ரெண்டு சங்கமும் யார எப்பிடி சிரிக்க வெக்கலாம்.. யாருக்கு என்ன உதவி பண்ணலாம் கிடையா கிடந்து தவிச்சிச்சிட்டிருக்கு. நீ என்ன இடையில வந்து சிண்டு முடியற? வேனும்னா ரெண்டு பக்கமும் கேட்டு சங்க உறுப்பினர் அடையாள அட்டை வாங்கி வெச்சிக்கோ! அப்புறம் பாரு.. உனக்கு கிடைக்கிற மரியாதைய!! :)) "

    யார எப்பிடி சிரிக்க வெக்கலாம்..அதே அதே அதே!!!


    "உனக்கு கிடைக்கிற மரியாதைய!! :))" ஆபிஸ் ரூம் வச்சிருக்கீங்கலா? (சிவாஜி பார்த்தவர்களுக்கு புரியும்!!!)

    ReplyDelete
  33. CVR said...
    அண்ணாத்த!!
    நீங்க கோயமுத்தூர் பக்கமா??

    குசும்பு கொஞ்சம் ஓவாராய்த்தான் இருக்கு!! ;-D

    படித்தேன்
    சிரித்தேன்
    ரசித்தேன்!!

    வாழ்த்துக்கள்!! :-)


    நன்றி CVR தங்கள் முதல் வருகைக்கும்....தங்கள் கருத்துக்கும்.

    ReplyDelete
  34. குசும்பன் சங்கங்களையே கலாய்ச்சிருக்கீங்க, , , , ,

    சூப்பர்,

    ReplyDelete
  35. வெங்கட்ராமன் said...
    குசும்பன் சங்கங்களையே கலாய்ச்சிருக்கீங்க, , , , ,

    சூப்பர், "

    நான் அவன் இல்லை! இரண்டு சங்கங்களும் ஆபிஸ் ரூம் ரெடி
    செய்துவச்சிக்கிட்டு ஆள் யாருன்னு தேடிக்கிட்டு இருக்காங்கலாம்....

    யாருன்னு தெரிஞ்சா....சிபிகிட்ட இல்ல காய்திரி கிட்ட போட்டு
    கொடுத்துடுங்க....

    ReplyDelete
  36. ம்ம்ம்.... இதுல பாதி உண்மை பாதி பொய்... எது உண்மை எது பொய்னு மக்களுக்குத் தெரியும்....

    ReplyDelete
  37. வாங்க ஜி உங்கள் வருகைக்கு நன்றி

    என்ன இப்படி பொத்தாம் பொதுவா "இதுல பாதி உண்மை பாதி பொய்... "ன்னு மொட்டையா சொன்னா எப்படி...எந்த பாதி உண்மை எந்த பாதி பொய்ன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  38. Enna Ezhavo? va.vaa. & pa.paa sangamam. ennayya ithellam.

    NISUMBAN

    Thalaivar.
    ku.ku sangam
    ni.nee sangam

    100 thadavai sollipparum kusumbare! vadai theriyum. mannilkkavum. vidai theriyum

    ReplyDelete