Tuesday, June 12, 2007

கவிதை விமர்சனம்

கவிதை ????
என் உடம்பு அனல் போல் கொதிக்கிறதே

காதலியே நீ என்ன சமையல் அறையில் வேலை செய்கிறாயா?
(ம்ம்ம் இல்ல மொட்ட வெய்யில்ல மாடு மேச்சுக்கிட்டு இருக்கேன் வா உன்னையும் அதோடு சேர்த்து மேய்க்கிறேன்.)

என் கை விரல்கள் எறிகிறதே
காதலியே நீ என்ன துணி துவைக்கிறாயா?
(சொறி புடிச்சவனே ஒழுங்கா சோப்பு போட்டு குளின்னா கேக்குறீயா?)

என் காலகள் வலிக்கின்றனவே
காதலியே நீ என்ன தண்ணீர் தூக்கி செல்கிறாயா?
(ம்ம்ம் இல்ல பண்ணி குட்டிய தூக்கிக்கிட்டு போறா? போய் ஹல்ப் பண்ணு)

என் கண்களில் நீர் தலும்புகிறதே!
காதலியே நீ என்ன சோகமாக இருக்கிறாயா?
(அஞ்சர குல்ல வண்டிய நைட் அஞ்சு தடவ பார்த்தா கண்ணு கலங்காம என்ன டா பண்ணும்)

காதலியே என் காதலை ஏற்றுக்கொள்
உன்னை பூவை விட மெண்மையாக பார்த்துக்கொள்வேன்.

(ஏன் டா உனக்கு உடம்பு கொதிக்கிறது, கை எறிகிறது,கால் வலிக்கிறது, கண்ணு நொல்லை உன்ன பார்த்துக்கவே ரெண்டு ஆளு வேணும் போல இருக்கு இதுல அவள பார்த்துக்கபோறீயா? போ டா போ)

(நண்பா உன் கவிதைய தமிழ் மணத்துல போட்டுட்டேன் டா!)

25 comments:

  1. //////////////////////
    (நண்பா உன் கவிதைய தமிழ் மணத்துல போட்டுட்டேன் டா!)
    //////////////////////

    உங்க நண்பர் இனிமே கவிதை எழுதுவாரா இதப் பார்த்தா . . . . . .?
    இல்ல எழுதுன கவிதைய உங்க கிட்ட காட்டுவாரா. . . . . . . ?

    எப்படியோ நீங்க அவர்கிட்ட அடி வாங்க போறது உறுதி.

    ReplyDelete
  2. உங்ககிட்ட கவிதையை கொடுத்து விமர்சனம் பண்ண சொன்ன உங்க நண்பனை நொந்துக்கறதா இல்ல, கவிதைன்னா ஊரை விட்டே ஒடாம உள்ளூர்ல இருந்தே குசும்பு பண்ற உங்களை நொந்துக்கறதான்னு தெரியலை.
    anyhow, enjoy!!

    ReplyDelete
  3. "உங்க நண்பர் இனிமே கவிதை எழுதுவாரா இதப் பார்த்தா . . . . . .?
    இல்ல எழுதுன கவிதைய உங்க கிட்ட காட்டுவாரா. . . . . . . ?"

    ம்ம்ம் அப்படி எல்லாம் சாதாரணமா நினைச்சிடாதீங்க...
    அதன் பிறகும் டெய்லி இன்றைய கவிதைகள் என்று தலைப்பு
    வேற போட்டு கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான்...

    "எப்படியோ நீங்க அவர்கிட்ட அடி வாங்க போறது உறுதி. "

    நமக்கு இது எல்லாம் புதுசா என்ன!
    அரசியல்ல இது எல்லாம் சகஜம்மப்பா!

    ReplyDelete
  4. "உங்ககிட்ட கவிதையை கொடுத்து விமர்சனம் பண்ண சொன்ன உங்க நண்பனை நொந்துக்கறதா"

    உங்களுக்கு சுப்புடு மாதிரி நானும்
    எங்க பெரிய ஆளா ஆயிடுவேனோ என்கிற பயம்!

    ReplyDelete
  5. ஆசீப் மீரான் அண்ணாச்சி பேச்சை கேட்டு அணிந்துரை எழுத உங்ககிட்ட கொடுத்தாரா?

    :)

    ReplyDelete
  6. //அரசியல்ல இது எல்லாம் சகஜம்மப்பா//

    இது யாரோட எழுத்தோடவோ ஒத்துப் போகுதே!

    இதே மாதிரி ஒரு பதில் எங்கியோ பார்த்திருக்கேனே!

    மக்கள்ஸ்! அப்படியே நீங்களும் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!

    ReplyDelete
  7. //உங்களுக்கு சுப்புடு மாதிரி நானும்
    எங்க பெரிய ஆளா ஆயிடுவேனோ என்கிற பயம்!
    //

    உங்க விமர்சனத்தை விட இதுதான் காமெடி!

    நகைச்சுவை உணர்வு உங்களுக்கு நிறையவே இருக்கு!

    ReplyDelete
  8. "உங்க விமர்சனத்தை விட இதுதான் காமெடி!

    நகைச்சுவை உணர்வு உங்களுக்கு நிறையவே இருக்கு! "

    குட்டு வாங்கினாலும் மோதிர கையாள குட்டு வாங்கனும் என்று
    சொல்லுவாங்க...இன்னைக்கு வைர மோதிர கையால குட்டு வாங்கியாச்சி..

    ReplyDelete
  9. "//அரசியல்ல இது எல்லாம் சகஜம்மப்பா//

    இது யாரோட எழுத்தோடவோ ஒத்துப் போகுதே!

    இதே மாதிரி ஒரு பதில் எங்கியோ பார்த்திருக்கேனே!

    மக்கள்ஸ்! அப்படியே நீங்களும் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!"

    A.R ரஹுமான் எப்படி எல்லா புகழும் இறைவனுக்கே!
    என்று சொல்வது போல்...நான் எழுதுவது எல்லாம் யாருடனும்
    ஒத்து போனால் அது என் மானசீக குரு ..அண்ணன் சிபியையே
    சேரும்...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்
    Start your own website 1GB with 1 Free domain Rs.1500/-
    visit http://space2inet.com

    ReplyDelete
  11. //நான் எழுதுவது எல்லாம் யாருடனும்
    ஒத்து போனால் அது என் மானசீக குரு ..அண்ணன் சிபியையே
    சேரும்...
    //

    ஆரம்பிச்சிட்டீங்களா!

    நேத்தே என்கிட்ட ஒருத்தர் கேட்டுட்டார். பேசாம நான் என்று எண்ணப்படுபவர்னு ஒரு பகுதி போட்டு அங்க என் பேரையும் போட்டு வையுங்க!

    ReplyDelete
  12. "ஆசீப் மீரான் அண்ணாச்சி பேச்சை கேட்டு அணிந்துரை எழுத உங்ககிட்ட கொடுத்தாரா?

    :)"

    இதுல ஏதோ உள்குத்து இருக்குறமாதிரி தெரியுதே!

    ReplyDelete
  13. "நேத்தே என்கிட்ட ஒருத்தர் கேட்டுட்டார். பேசாம நான் என்று எண்ணப்படுபவர்னு ஒரு பகுதி போட்டு அங்க என் பேரையும் போட்டு வையுங்க!"

    என்ன கேட்டார்?

    ReplyDelete
  14. //என்ன கேட்டார்? //

    நீங்கதானே குசும்பன்கற பேருலயும் எழுதறீங்கன்னு!

    ReplyDelete
  15. //இதுல ஏதோ உள்குத்து இருக்குறமாதிரி தெரியுதே! //

    உள்குத்தெல்லாம் இல்லை!

    அணிந்துரை எழுத நண்பர்கள்கிட்டே கொடுக்கலாம்னு சொன்னார். பாவம் உங்க நண்பர் உங்ககிட்டே கொடுத்துட்டார்.

    :)

    ReplyDelete
  16. தளபதியின் வலையுலக வாரிசுக்கு முதலாமாண்டு நிறைவு விழா வாழ்த்துக்கள்!


    இளைய தள ரசிகர் மன்றம்
    கொருக்குப் பேட்டை.
    சென்னை.

    ReplyDelete
  17. நாமக்கல் சிபி said...
    //என்ன கேட்டார்? //

    நீங்கதானே குசும்பன்கற பேருலயும் எழுதறீங்கன்னு!

    உண்மைய ஒத்துக்கொண்டு இருக்க மாட்டீங்களே...

    ReplyDelete
  18. //உண்மைய ஒத்துக்கொண்டு இருக்க மாட்டீங்களே...//

    நீர் ஒருத்தர் போதாதா! ஊர்ஜிதம் பண்ண?

    நான் வேற ஒத்துக்கணுமா என்ன?

    :)

    ReplyDelete
  19. "நீர் ஒருத்தர் போதாதா! ஊர்ஜிதம் பண்ண?

    நான் வேற ஒத்துக்கணுமா என்ன?

    :) "
    அடுத்த குசும்பு மலேசியாவ பத்தி போட்டா
    எல்லாம் நம்பிடுவாங்க..
    so நெக்ஸ்ட் மலேசியா பத்தி போட்டுவிடுவோம்..
    ரவி என்ன ஆனார்? ஆளய காணும்?

    ReplyDelete
  20. தல...

    இதே மேட்டர்ல நானும் சங்கத்துக்காக ஒன்னு எழுதி வச்சிருக்கேன். இன்னும் ரெண்டு மூனு நாளுல ரிலீஸ் பண்ணலாம்னு நெனச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்களும் போட்டுத் தாளிச்சிட்டீங்க...

    நானும் போடுறேன் :))

    ReplyDelete
  21. ஜி..
    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  22. //so நெக்ஸ்ட் மலேசியா பத்தி போட்டுவிடுவோம்..
    ரவி என்ன ஆனார்? ஆளய காணும்?
    //

    போடுங்க!

    நீங்க எந்த ரவியைக் கேக்குறீங்க?

    ஓ! புரிஞ்சி போச்சு!

    :)

    ஓகே! ஓகே!

    ReplyDelete
  23. நாமக்கல் சிபி "நீங்க எந்த ரவியைக் கேக்குறீங்க?

    ஓ! புரிஞ்சி போச்சு!

    :)

    ஓகே! ஓகே! "

    ஆகாதா..காகா...சித்தப்பு நீங்க வேற ஏதோ சொல்ல வர மாதிரி
    தெரியுது...

    நான் அவர் இல்லை- ஜீவன் நடிச்ச படம் பார்த்திட்டீங்கலா?

    ReplyDelete
  24. என்ன நடக்குது இங்க...?

    ReplyDelete
  25. "மின்னுது மின்னல் said...
    என்ன நடக்குது இங்க...? "

    இங்கன்னா எங்க அங்கயா (அலைன்லயா) இல்ல இங்க
    (இந்தியாவுலயா?) இந்தியாவுலன்னா நீங்க ஏன் அங்கன்னு கேட்காம இங்கன்னு கேட்டீங்க? அப்ப நீங்க அங்க இல்லீயா அப்ப நீங்க இங்கதான் இருக்கீங்கலா?

    இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்...இங்க என் ஆபீஸ்கு
    முன்னாடி ஒரு குழந்தை நடக்குது, பூ விற்க்கிற ஆயா நடக்குது, இது போதுமா ...இன்னும் கொஞ்சம் வேணுமா?

    ReplyDelete