நண்பனின் கழுதை சாரி கவிதை!
கவிதை 1
காலையில் எழுந்ததும்
இந்துக்கள் படிப்பதோ கீதை
முஸ்லிம்கள் படிப்பதோ குர்ரான்
கிறிஸ்துவர்கள் படிப்பதோ பைபிள்
ஆனால் நான் படிப்பதோ
நீ எழுதிய உன் காதல் கடிதத்தை.......
"டேய் இத்தனை நாளா காலையில் எழுந்ததும் ஒரு கழுதை போட்டோவும்அதுல என்னை பார் யோகம் வரும்ன்னுஎழுதி இருக்கிறதை படிப்பாய்!அதுதான் உன் காதலி கடிதம்+ காதலி போட்டோஎன்னு இப்பதான் டா புரிஞ்சுக்கிட்டேன்."
கவிதை 2
என் கண்னென்னும் காமிராவில் (கேமிரா இல்லேங்குறத எப்படி எல்லாம் சொல்லுற டா நீ!!!)
என் இதயமென்னும் பிலிம் மாட்டி
நான் பிடித்த உன் புகைப்படத்தை
என் கண்ணீரால் கழுவி (ஏன் அவ போட்டோவ பார்த்தா கண்ணீர் விடும் படி அட்டு பிகரா இருப்பாளோ!!!)
என் நெஞ்சென்னும் சுவற்றில் (இங்க என்கிட்ட ஒரு ஆணிய கொடு அப்புறம் எங்க ஆணி அடிச்சு அவபோட்டோவ மாட்டுறேங்குறத மட்டும்பாரு...)
என் காதல்லென்னும் ஆணியால்
என் மனதில் பதித்துவிட்டேனடி
என் காதலியே.
நன்றி (டேய் இத நாங்க சொல்லனும் உனக்கு, ஏதோ இரண்டு கவிதையோட இன்னைக்கு எங்கள விட்டியேன்னு...)
கவிதை எழுதறது தப்புன்னா சொல்லுங்க தல, இனிமே எழுதலை. அதுக்காக விமர்சனம் இப்படி எழுதணுமா? இனிமே ஊர்ல ஒரு பய கவிதை எழுத முடியாது போல இருக்கே!!!
ReplyDeleteippadi oru friend vaithukondu kaathal kavithai elutha aaasaipadalama Mr.Siva..
ReplyDeleteஎதிர்கவிதை எதிரி கவிதையாகம பாத்துக்கோப்பா குசும்பா....
ReplyDeleteஎதிர் கவிதை 2 கலக்கல்!