Thursday, May 24, 2007

இவர்கள் இப்படிதான்
கேப்டன்: நான் திருமணமண்டபத்தை இடித்தற்க்காக எல்லாம் வருத்தபடவில்லை,அது மக்கள் பணி செய்ய வந்ததற்காக கொடுத்த விலை (ம்ம்ம்..ம்ம்ம்..சின்ன புள்ள அழுவதை போல!) நான் கொஞ்சம் கூட கவலைபடவில்லை, திரும்ப திரும்ப சொல்கிறேன் நான் கவலை படவில்லை.


ராமதாஸ்: இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயம், கிட்டி பில், கோலி போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மறந்துவிட்டது, அதை மீட்டு எடுக்கும் முயற்ச்சியாக எங்கள் அமைப்பு உறுப்பினற்கள் தெருவோரங்களில் இந்த விளையாட்டை விளையாட்டை விளையாடி அதன் பெருமைகளை உணர்த்துவார்கள், அதில் யாரும் தவறு செய்தால் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கலாம்.


வைகோ: அன்று கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு தனியாக படகில் சென்றுவரும் பொழுது அண்ணன் கலைஞர் அவரின் தூண்டுதலின் படி படகை கவிழ்க்க நடந்ததை பற்றி நான் சொன்னால், தமிழன் நெஞ்சம் துடிக்கும்...அன்று கடலில் விழுந்த என்னை ஜிலேப்பி, சிப்பி போன்ற கொடிய மீன்களுக்கு இடையில் இருந்து என்னை காப்பாற்றிய தமிழ் மாறன் தான் இதற்க்கு சாட்ச்சி ஆனா அவர் இப்பொழுது உயிரோடு இல்லை.


மேலும் இலவச டிவீயில் என் படம் மட்டும் தெரியாத படி டிவீக்கு என்று ஒரு Fire wall அதில் பொருத்த பட்டு இருக்கிறது என் படம் அதில் வரும் பொழுது மட்டும் அது காமெடி டைம் மயில் சாமியை காண்பிக்கிறது.


கலைஞர்: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்கும் படி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் நடவடிக்கை எடுப்பார்.


மன்மோகன் சிங்: திரு.கலைஞர் அவர்களே உங்கள் கடிதம் வருவதற்க்குள் அவர்கள் அணை கட்டி திறப்பு விழா அழைப்பிதழில் என் பெயரை போட்டு மெயில் அணுப்பி விட்டார்கள், ஆகையால் நீங்க அடுத்த முறையாவது மெயில் அல்லது SMS அனுப்புங்க உடனே நடவடிக்கை எடுக்கிறேன்.


ஜெயலலித்தா: இரண்டு ரூபாய் அரிசியில் முன்பு புழுதான் இருந்தது இப்பொழு பாம்பு இருக்கிறது.


இலகனேசன்: திருவாரூர் நாகை அகல ரயில் பாதை திட்டத்தை கைவிட வேண்டும், ராமன் இலங்கைக்கு போகும் பொழுது அந்த வழியாக போனதற்கான ஆதாரம் இருக்கிறது அதை அழிக்க கூடாது.

உங்கள் கற்பனையை "comment" ஆக போடுங்களேன்.

4 comments:

said...

///// உங்கள் கற்பனையை "comment" ஆக போடுங்களேன்.

பாஸூ, உங்க அளவுக்கெல்லாம் நம்மளால கற்பனை பண்ண முடியாது.

இனி பதிவு போடும் போது, jestify பண்ணாமல் போடுங்களேன், நெருப்பு நரி(Firefox)ல பார்க்கும் போது சரியா தெரியல.

வழக்கம் போல கிளப்புங்கள்.

said...

Thanks for your support and regular visit.
Here after I won’t justify the text. thanks

Regards
Kusumban

said...

குசும்பன்,

நீங்க எழுதியிருக்கறது எதுவுமே கற்பனையா தெரியல..

இந்த மாதிரியே நீங்க சொன்ன தலைவர்ங்க சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..

முக்கியமா விஜயகாந்த், ராமதாஸ், வை.கோ இல. கணேசன்..

said...

உங்கள் வருகைக்கு நன்றி திரு.ஜோசப்.